பாடம்:
அனுமதி கோர வேண்டிய மூன்று அந்தரங்க நேரங்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் அதிகமானோர் (அல்குர்ஆன்: 24:58) இல் வரும் அனுமதி கோரும் இறைவசனத்தின்படி நடக்கவில்லை. ஆனால், நான் என்னுடைய இந்த அடிமைப்பெண்ணை என்னிடம் வருவதற்கு அனுமதி கோருமாறு ஏவுகிறேன்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபூயஸீத் (ரஹ்)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார்.
(அபூதாவூத்: 5191)بَابُ الِاسْتِئْذَانِ فِي الْعَوْرَاتِ الثَّلَاثِ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ح وحَدَّثَنَا ابْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، وَابْنُ عَبْدَةَ، وَهَذَا حَدِيثُهُ قَالَا: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ:
«لَمْ يُؤْمَرْ بِهَا أَكْثَرُ النَّاسِ آيَةَ الْإِذْنِ، وَإِنِّي لَآمُرُ جَارِيَتِي هَذِهِ تَسْتَأْذِنُ عَلَيَّ»
قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَلِكَ رَوَاهُ عَطَاءٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ يَأْمُرُ بِهِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4517.
Abu-Dawood-Shamila-5191.
Abu-Dawood-Alamiah-4517.
Abu-Dawood-JawamiulKalim-4519.
இந்தச் செய்தியின் 3 அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அம்ர்-இப்னுஸ் ஸர்ஹ், 3 . முஹம்மத் பின் ஸப்பாஹ் பின் ஸுஃப்யான், 4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்தா.
5 . ஸுஃப்யான் பின் உயைனா
6 . உபைதுல்லாஹ் பின் அபூயஸீத்
7 . இப்னு அப்பாஸ் (ரலி)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு உயைனா —> உபைதுல்லாஹ் பின் அபூயஸீத் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17611, அபூதாவூத்-5191, குப்ரா பைஹகீ-13555, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1052, அபூதாவூத்-5192,
சமீப விமர்சனங்கள்