பாடம்:
மூன்று அந்தரங்க நேரங்கள்.
ஸஃலபா பின் அபூமாலிக்-அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மூன்று அந்தரங்க நேரங்களை (முறைப்படி) கடைப்பிடித்து வந்த, பனூ ஹாரிஸா வின் சகோதரர் அப்துல்லாஹ் பின் ஸுவைத்… அவர்களை சந்தித்து அந்த நேரங்கள் குறித்து கேட்பதற்காக அவரிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?” என என்னிடம் கேட்டார். அதற்கு நான், “அதைச் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று கூறினேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் ஸுவைத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
1 . நடுப்பகலில் நான் என் ஆடையைக் களைந்தால், என் வீட்டில் உள்ள பருவம் அடைந்த யாரும் என் அனுமதி இல்லாமல் என் அறைக்குள் நுழைய மாட்டார்கள். நான் அழைத்தால் தான் அனுமதி.
2 . அதிகாலை நேரம் வந்தும் மக்கள் நடமாட்டம் ஏற்படும் வரையிலும் (தொழுது முடிக்கும் வரையிலும்) யாரும் உள்ளே வரமாட்டார்கள்.
3 . இஷா தொழுதுவிட்டு நான் என் ஆடையை களைந்து உறங்கும் வரையிலும் யாரும் உள்ளே வரமாட்டார்கள்.
(al-adabul-mufrad-1052: 1052)بَابُ الْعَوْرَاتِ الثَّلَاثِ
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ الْقُرَظِيِّ،
أَنَّهُ رَكِبَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ – أَخِي بَنِي حَارِثَةَ بْنِ الْحَارِثِ – يَسْأَلُهُ عَنِ الْعَوْرَاتِ الثَّلَاثِ، وَكَانَ يَعْمَلُ بِهِنَّ، فَقَالَ: مَا تُرِيدُ؟ فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَعْمَلَ بِهِنَّ، فَقَالَ: إِذَا وَضَعْتُ ثِيَابِي مِنَ الظَّهِيرَةِ لَمْ يَدْخُلْ عَلَيَّ أَحَدٌ مِنْ أَهْلِي بَلَغَ الْحُلُمَ إِلَّا بِإِذْنِي، إِلَّا أَنْ أَدْعُوَهُ، فَذَلِكَ إِذْنُهُ. وَلَا إِذَا طَلَعَ الْفَجْرُ وَتَحَرَّكَ النَّاسُ حَتَّى تُصَلَّى الصَّلَاةُ. وَلَا إِذَا صَلَّيْتُ الْعِشَاءَ وَوَضَعْتُ ثِيَابِي حَتَّى أَنَامَ
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-1052.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-1038.
இந்தச் செய்தியின் கருத்தில் உள்ள இறைவசனம்:
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ அவர்கள் நபித்தோழரா? இல்லையா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. இந்த ஒரு செய்தியின் அடிப்படையில் இவரை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்ற அறிஞர்கள் நபித்தோழர் என்று கூறியுள்ளனர்.
பார்க்க: ராவீ-24699-அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ.
என்றாலும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் கருத்துவேறுபாடு இருப்பதால் இதை உறுதியாகக் கூறமுடியாது.
இவரை நபித்தோழர் என்று முடிவு செய்தால் இந்தச் செய்தி மவ்கூஃப் எனும் தரத்தில் அமைந்ததாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . அப்துல்அஸீஸ் பின் அப்துல்லாஹ்-அபுல்காஸிம்
3 . இப்ராஹீம் பின் ஸஃத்-அபூஇஸ்ஹாக்
4 . ஸாலிஹ் பின் கைஸான்
5 . இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ
6 . ஸஃலபா பின் அபூமாலிக்-அல்குரழீ
7 . அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ?
விரிவான தகவல்:
1 . இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாலிஹ் பின் கைஸான், உகைல் பின் காலித், முஹம்மத் பின் இஸ்ஹாக் ஆகியோர் ஸுஹ்ரீ —> ஸஃலபா பின் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அப்துல்லாஹ் பின் ஸுவைத் என்ற அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் ஸுவைத் அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
(பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1052, அல்இஸாபா-4/108)
2 . ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் குர்ரா பின் அப்துர்ரஹ்மான் என்பவர் ஸுஹ்ரீ —> ஸஃலபா பின் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அப்துல்லாஹ் பின் ஸுவைத் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாகவும், அப்துல்லாஹ் பின் ஸுவைத் அவர்களை நபித்தோழராகவும் அறிவித்துள்ளார்.
(பார்க்க: முஃஜமுஸ் ஸஹாபா-பஃகவீ-1634, 1635, தஃப்ஸீருத் தபரீ-17/353, முஃஜமுஸ் ஸஹாபா-இப்னு கானிஃ-950)
குர்ரா பின் அப்துர்ரஹ்மான் பின் ஹைவஈல் என்பவர் பற்றி இவர் பலமானவர் என்றும், சுமாரானவர் என்றும் சிலர் கூறியிருந்தாலும் இவர் முன்கருல் ஹதீஸ் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமும், இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று அபூஸுர்ஆ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோரும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/182, தஹ்தீபுல் கமால்-23/581, தஹ்தீபுத் தஹ்தீப்-3/438, தக்ரீபுத் தஹ்தீப்-1/800)
எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளும், மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்திகளும் ஏற்கப்படாது என்பதால் முதல் வகை அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.
இந்தச் செய்தி நபியின் சொல் அல்ல என்று முடிவு செய்தால் இந்தச் செய்தியை மட்டும் அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ அவர்கள் நபித்தோழர் என்று முடிவு செய்ய முடியாது.
அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ அவர்களை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்ற பலரும் நபித்தோழர் என்று கூறியுள்ளனர்.
الطبقات الكبير (4/ 281 ط الخانجي):
551 – سُوَيْد بن النُّعمان
ابن مالك بن عامر بن مجدعة بن جُشَم بن حارثة، وأمه الوقصاء بنت مسعود بن عامر بن عدي بن جُشم بن مَجدعة بن حارثة. فَوَلَد سويدُ بن النعمان: ثابتًا وجَميلةَ، وأمهما عُميرَة بنت مُرشد بن جَبْر بن مالك بن جُويرِيةَ بن حارثة بن الحارث. وشَهِدَ سُوَيْدُ بنُ النعمان أُحدًا، وهو الذي روى حديث العورات الثلاث.
أخبرنا محمد بن عمر، قال: حدثني أبو بكر بن عبد الله بن أبي سَبْرَةَ، عن يَزيد بن عبد الله بن الهَاد. وعن بُشير بن يَسَار عن سويد بن النعمان، أنه سُئِل عن العورات الثلاث، فقال: إذَا وَضَعت ثيابي من الظهيرة لم يدخل عليّ أحدٌ من أهلي قد بلغَ الحُلُمَ إلا بإذنٍ إلا أن أدعوه فذلك إِذنُه، وإذ طَلَعَ الفجرُ وتحرك الناسُ حتى تُصَلّي الصبح، وإذا صليتُ العشاء وهي التي تُسَمِّي الناسُ العَتَمَةَ وضَعتُ ثيابي فتلك العوراتُ الثلاثُ.
قال محمد بن عمر: وقد حدثني مَعمَرُ، ومحمد بن عبد الله عن الزُّهري، عن ثَعلبَة بن أبي مالك، وأخبرنا يعقوب بن إبراهيم بن سَعد الزهري، عن أبيه، عن صالح بن كيسان، قال: قال ابنُ شهاب: ركبتُ إلى عبد الله بن سُويد الحارثي أسأله عن العوراتِ الثلاث، ثم ذكر مثلَ حديث ابن ابي سَبرَةَ سواء.
قال محمد بن عمر: وحديثُ سُويد بن النعمان أثبَت، وقال عبد الله بن محمد بن عمارةَ الأنصاري صاحبُ حديث العوراتِ الثلاثِ هو سويد بن النعمان، ولا نعرفُ عبدَ الله بن سويد ولم نجد لَهُ في نسب بني حارثة ذكرًا، وهذا وَهلٌ ممن رواه، وليس لسويد بن النعمان ابنٌ يقال له عَبدُ الله فيكون الحديثُ عنه.
وكان لسويد بن النعمان وَلَدٌ فانقرضوا. وروى بُشَير بن يَسار أيضًا عن سويد بن النعمان حديثَ القسامة، قال: وأخبرني محمد بن عمر قال: حدثني ابن أبي سَبرةَ، عن إسحاق بن عبد الله بن أبي فَروَةَ، عن حرام بن سعد بن مُحَيَّصَة، قال خرج سويد بن النعمان على فرس، فلما نظر إلى بيوت خَيبر بالليل وقع به الفرسُ فَعطِب الفرسُ وكُسِرَت يدُ سُويد، فلم يَخرج من منزله حتى فتح رسولُ الله، صلى الله عليه وسلم، خيبرَ، فأسهَمَ له رسولُ الله، صلى الله عليه وسلم، سَهمَ فارس.
மேற்கண்ட செய்தியை சிலர் ஸுவைத் பின் நுஃமான் என்ற நபித்தோழரிடமிருந்து அறிவித்துள்ளனர். இது தான் மிகச் சரியானது என்று முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
இறப்பு ஹிஜ்ரி 207
வயது: 77
அவர்கள் கூறியதாக இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
குறிப்பிட்டுள்ளார். (சுருக்கம்)
(நூல்: தபகாதுல்_குப்ரா-551)
என்றாலும் வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
இறப்பு ஹிஜ்ரி 207
வயது: 77
விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இது ஏற்கமுடியாத செய்தி.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸுவைத்? வழியாக வரும் செய்திகள்:
- ஸாலிஹ் பின் கைஸான் —> ஸுஹ்ரீ —> ஸஃலபா பின் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அப்துல்லாஹ் பின் ஸுவைத்
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1052,
- குர்ரா பின் அப்துர்ரஹ்மான் —> ஸுஹ்ரீ —> ஸஃலபா பின் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அப்துல்லாஹ் பின் ஸுவைத் —> நபி (ஸல்)
பார்க்க: முஃஜமுஸ் ஸஹாபா-பஃகவீ-1634, 1635, தஃப்ஸீருத் தபரீ-17/353, முஃஜமுஸ் ஸஹாபா-இப்னு கானிஃ-950,
- முஃஜமுஸ் ஸஹாபா-பஃகவீ-1634.
معجم الصحابة للبغوي (4/ 100):
عبد الله بن سويد الحارثي – سكن المدينة وفي حديثه شك
1634 – حدثني الحسن بن إسرائيل النهرتيري نا عبد الله بن وهب المصري عن قرة يعني ابن عبد الرحمن بن حيويل عن ابن شهاب عن ثعلبة بن مالك أو ابن أبي مالك القاضي – كذا قال – عن عبد الله بن سويد قال: سألت النبي صلى الله عليه وسلم عن العورات الثلاث: فقال: إذا أنا وضعت ثيابي بعد الظهيرة لم يلج علي أحد من الخدم الذين بلغوا الحلم ولا أحد لم يبلغ الحلم من الأحرار إلا بإذن وإذا وضعت ثيابي من بعد صلاة العشاء ومن قبل طلوع الفجر.
هكذا حدثني الحسن بن إسرائيل بهذا الحديث مرفوعا.
ويقال: إنه وهم.
معجم الصحابة للبغوي (4/ 100):
1635 – حدثنيه محمد بن إسحاق نا أصبغ قال: أخبرني ابن وهب عن قرة عن ابن شهاب عن ثعلبة بن أبي مالك: أنه سأل عبد الله بن سويد وكان من أصحاب النبي صلى الله عليه وسلم.
فذكر الحديث ولم يسنده ولا أعلم روى غيره.
…
- தஃப்ஸீருத் தபரீ-17/353.
تفسير الطبري (17/ 353):
حدَّثني يونسُ بنُ عبدِ الأعلى، قال: أخبَرنا ابن وهبٍ، قال: أخبَرني قُرَّةُ بنُ عبدِ الرحمنِ، عن ابن شهابٍ، عن ثعلبةَ بن أبي مالكٍ القُرَظِيِّ، أنه سأَل عبدَ اللهِ بنَ سُوَيدٍ الحارِثيَّ، وكان مِن أصحابِ رسولِ اللهِ صلى الله عليه وسلم، عن الإِذْنِ في العَوْرَاتِ الثلاثِ، فقال: إذا وضَعتُ ثيابى مِن الظَّهِيرةِ، لم يَلِجُ عليَّ أحدٌ مِن الخَدَمِ الذِى بَلَغَ الحُلُمَ، ولا أحدٌ ممن لم يبلُغِ الحُلُمَ مِن الأحرارِ، إلا بإذنٍ.
…
- முஃஜமுஸ் ஸஹாபா-இப்னு கானிஃ-950.
معجم الصحابة لابن قانع (2/ 139)
950 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، نا الْحَسَنُ بْنُ إِسْرَائِيلَ النَّهْرُتِيرِيُّ، نا ابْنُ وَهْبٍ، نا قُرَّةُ يَعْنِي بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ الْقُرَظِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَوْرَاتِ الثَّلَاثِ، فَقَالَ: «إِذَا وَضَعْثُ ثِيَابِيَ بَعْدَ الظُّهْرِ , وَلَمْ يَلِجْ أَحَدٌ مِنَ الْخَدَمِ – الَّذِينَ بَلَغُوا الْحُلُمَ , وَلَا مَنْ لَمْ يَبْلُغِ الْحُلُمَ – الْأَحْرَارِ إِلَّا بِإِذْنٍ , وَإِذَا وَضَعْتُ ثِيَابِيَ بَعْدَ صَلَاةِ الْعِشَاءِ وَقَبْلَ الْغَدَاةِ» كَذَا قَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّمَا الصَّحِيحُ مِنْ قَوْلِ عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ
…
- அல்இஸாபா-4/108.
الإصابة في تمييز الصحابة (4/ 108):
… وروى ابن مندة، من طريق عقيل، عن الزهري، عن ثعلبة بن أبي مالك أنه سأل عبد اللَّه بن سويد الحارثي عن العورات الثلاث.
قال ابن مندة: ورواه ابن إسحاق، وقرّة، عن الزّهري، عن ثعلبة- أنه سأل عبد اللَّه ابن سويد- وكان من أصحاب النبيّ صلى الله عليه وسلم.
قلت: لكن عند البغوي وابن السكن وابن قانع من طريق قرة عن الزهري سويد بحذف عبد اللَّه، والأول أصح.
قال البغويّ: يقال: إن الثاني وهم، ثم رواه من وجه آخر عن قرة على الصواب.
وقال ابن السّكن: رأيته في روايات أصحاب ابن وهب موقوفا، ورفعه بعضهم، ولا أدري من أخطأ فيه.
وقال أبو أحمد العسكريّ: هو ابن أخي أم حميد زوجة أبي حميد السّاعدي، وله عنها رواية، ولم يصحح بعضهم صحبته.
قلت: ما عرفت من ذكر ابن أخي حميد في الصحابة.
قال البخاريّ في «التاريخ» : عبد اللَّه بن سويد الأنصاري عن عمته أم حميد، وعنه داود بن قيس، وكذا ذكره ابن أبي حاتم وابن حبان في التابعين.
…
أسد الغابة في معرفة الصحابة (3/ 272):
2998 – عَبْدُ اللَّه بنُ سُوَيْد
(ب د ع) عَبْدُ اللَّه بنُ سُوَيْد الأنصاري الحَارثي، أحد بني حارثة. له صُحْبَة، عداده في أهل المدينة.
روى الليث بن سعد، عن عُقَيْل، عن الزهري، عن ثعلبة بن أبي مالك: أنه سأل عبد اللَّه ابن سويد الحارثي – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم عن الإذْن في العورات الثلاث، يعني قوله تعالى: {لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمانُكُمْ} … الآية. قال: لا جناح فيما سواهن. وقال أبو أحمد العسكري: ذكر بعضهم أنه لا تصح صُحْبَتُه، وقال: روى عن أم حُمَيْد عَمَّتِه، وهي امرأة أبي حُمَيد الساعدي. روى عنه ثعلبة بن أبي مالك. أخرجه الثلاثة.
…
معرفة الصحابة لأبي نعيم (3/ 1682)
عَبْدُ اللهِ بْنُ سُوَيْدٍ الْحَارِثِيُّ أَنْصَارِيٌّ لَهُ صُحْبَةٌ، عِدَادُهُ فِي الْمَدَنِيِّينَ، حَدِيثُهُ عِنْدَ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ الْقُرَظِيِّ
4213 – حَدَّثَنَا. . . قَالَ: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ، أَنَّهُ سَأَلَ عَبْدَ اللهِ بْنِ سُوَيْدٍ الْحَارِثِيَّ عَنِ الْإِذْنِ فِي الْعَوْرَاتِ الثَّلَاثِ يَعْنِي قَوْلَهُ {لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ} [النور: 58] الْآيَةَ، قَالَ: لَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا سِوَاهُنَّ
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-5191,
சமீப விமர்சனங்கள்