தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5248

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பாம்புகளைக் கொல்லுதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்புகளுடன் நாம் சண்டையிட்டதிலிருந்து அவைகளுடன் சமாதானம் செய்யத் தயாராக இல்லை. எனவே பயந்து அவைகளை (அடிக்காமல்) விட்டுவிட்டவர் நம்மை சார்ந்தவர் அல்ல.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 5248)

بَابٌ فِي قَتْلِ الْحَيَّاتِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ وَمَنْ تَرَكَ شَيْئًا مِنْهُنَّ خِيفَةً، فَلَيْسَ مِنَّا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5248.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4570.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-இப்னு அஜ்லான் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்தொடர்களில் மட்டுமே விமர்சனம் உள்ளது.

1. இவர், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தி.

2. இவர், ஸயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) கூறியதாக அறிவிக்கும் செய்தி.

(கூடுதல் தகவல் பார்க்க: இப்னு அஜ்லான் , அரபியில்: محمد بن عجلان ثقة أم صدوق؟)

  • அதில் இந்த அறிவிப்பாளர்தொடர் இல்லை என்பதால் இது சரியான செய்தியாகும்.
  • மேலும் “நாம் பாம்புகளுடன் சண்டையிட்டதிலிருந்து” என்பதின் கருத்து பற்றி தஃப்ஸீர் தப்ரீ போன்ற சில நூல்களில் இப்லீஸ், ஆதம் (அலை) அவர்களுக்கு பணிய மறுத்ததால் விரட்டப்பட்ட பின், அவன் பாம்பின் உடலில் நுழைந்து ஆதம் (அலை) அவர்களை வழிக்கெடுத்தான் என்று கூறப்பட்டுள்ளது. இது சரியான செய்தியல்ல. யூத, கிருஸ்துவர்களின் கருத்துக்களாகும்.

பாம்புகளை பற்றி மனித சமுதாயம் தெரிந்ததிலிருந்து இயற்கையிலேயே அவைகளைக் கண்டால் அடிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இடையில் தான் அவைகளை வணங்கப்படத்தக்கவைகளாகவும், அடித்தால் வேறு பாம்பு பழிவாங்கிவிடும் என்ற பயமும் மனிதர்களுக்கு ஏற்பட்டு விட்டது. அதைத் தான் இந்த செய்தியில் தவறென சுட்டிக்காட்டி அடிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. (மேலும் பார்க்க: முஸ்லிம்-4502 )

5 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . பார்க்க: அஹ்மத்-7366 , 9588 , 10741 , அபூதாவூத்-5248 , முஸ்னத் பஸ்ஸார்-8372 , இப்னு ஹிப்பான்-5644 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6223 ,

2 . அல்முஃஜமுல் அவ்ஸத்-2113 .

மேலும் பார்க்க: புகாரி-3297 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.