தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-554

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஜமாஅத்) கூட்டுத் தொழுகையின் சிறப்பு.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுபுஹ் தொழுகை நடத்திய பின், “இன்னார் தொழ வந்தாரா? என்று நபித்தோழர்களிடம் விசாரித்தார்கள். அவர்கள் இல்லை என பதிலளித்தனர். பிறகு, (வேறொருவரை பற்றி) இன்னார் தொழ வந்தாரா? என்று கேட்டார்கள். அவர்கள் இல்லை என பதிலளித்தனர். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் (சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள்.

(இறை நெருக்கத்தைப் பெறுவதில்) முதல் வரிசையாகிறது மலக்குமார்களின் வரிசை போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள்.

ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதை விட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். எண்ணிக்கை அதிகரிப்பது தான் உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 554)

بَابٌ فِي فَضْلِ صَلَاةِ الْجَمَاعَةِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَصِيرٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ:

صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا الصُّبْحَ، فَقَالَ: أَشَاهِدٌ فُلَانٌ، قَالُوا: لَا، قَالَ: أَشَاهِدٌ فُلَانٌ، قَالُوا: لَا، قَالَ: «إِنَّ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ أَثْقَلُ الصَّلَوَاتِ عَلَى الْمُنَافِقِينَ، وَلَوْ تَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَيْتُمُوهُمَا، وَلَوْ حَبْوًا عَلَى الرُّكَبِ

وَإِنَّ الصَّفَّ الْأَوَّلَ عَلَى مِثْلِ صَفِّ الْمَلَائِكَةِ وَلَوْ عَلِمْتُمْ مَا فَضِيلَتُهُ لَابْتَدَرْتُمُوهُ،

وَإِنَّ صَلَاةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلَاتِهِ وَحْدَهُ، وَصَلَاتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِهِ مَعَ الرَّجُلِ، وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-467.
Abu-Dawood-Shamila-554.
Abu-Dawood-Alamiah-467.
Abu-Dawood-JawamiulKalim-466.




  • இந்த செய்தி வெவ்வேறு வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. சிலவை விரிவான செய்திகளாகவும், சிலவை சுருக்கமாகவும் வந்துள்ளது.
  • இப்னு அப்துல்பர் அவர்கள் இந்த செய்தியை பலமானது அல்ல. இதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். (நூல்: அத்தம்ஹீத் லிமா ஃபில்முஅத்தா 6/316)
  • என்றாலும் இந்த செய்தியை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    முஹம்மது பின் யஹ்யா அத்துஹ்லீ, அபூஹாத்திம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ போன்றோர் சரியானது எனக் கூறியுள்ளனர்.

1 . இந்த செய்தி அபூஇஸ்ஹாக் —> அப்துல்லாஹ் பின் அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஷுஃபா அவர்களும், ஹஜ்ஜாஜும் இந்த அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

2 . அபூஇஸ்ஹாக் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. (இதில் அபூஇஸ்ஹாக் அப்துல்லாஹ்வின் தந்தை வழியாக அறிவித்துள்ளார்) அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து ஷுஃபா அவர்களும், ஸுஹைரும், வேறு சிலரும் இந்த அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

(ஷுஃபா அவர்கள், அபூஇஸ்ஹாக் தாம் தந்தை, மகன் இருவர் வழியாகவும் செவியேற்றுள்ளேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்)

3 . அபூஇஸ்ஹாக் —> ஐஸார் பின் ஹுரைஸ் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

  • இப்னு அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இந்தக் கருத்தில் அபூஇஸ்ஹாக் —> ஐஸார்பின்ஹுரைஸ் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தி பற்றி தனது தந்தை அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களிடமும், அபூஸுர்ஆ அவர்களிடமும் கேட்டார். அதைப்பற்றி அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் (மேற்கண்ட 3 வகைகளைக் கூறியபின்) அபூஇஸ்ஹாக் அதிகமான ஹதீஸ்களை தெரிந்து வைத்திருப்பவர். எனவே  இந்த அனைத்து வகையிலும் அவர் செவியேற்றிருப்பார் என்று கூறினார்.
  • அபூஸுர்ஆ அவர்கள், அபூஇஸ்ஹாக் —> ஐஸார் பின் ஹுரைஸ் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரை அறிவிக்கும் அபுல் அஹ்வஸ் தவறிழைத்துவிட்டார். அபூஇஸ்ஹாகிமிடருந்து ஷுஃபா அறிவிக்கும் செய்தியே சரியானது எனக் கூறினார். (நூல்: இலலுல் ஹதீஸ்-277 (2/149)

4 . அபூஇஸ்ஹாக் —> அப்துல்லாஹ் பின் அபூஸுஃப்யான் —> உபை (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


இந்தக் கருத்தில் உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி)

பார்க்க: இப்னு அபீ ஷைபா-3352 , 3816 , அஹ்மத்-21269 , தாரிமீ-130613071308 , இப்னு மாஜா-790 , நஸாயீ-843 , குப்ரா நஸாயீ-919 , இப்னு குஸைமா-, ஹாகிம்- , குப்ரா பைஹகீ-, …..


2 . அப்துல்லாஹ் பின் அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி)

பார்க்க : தயாலிஸீ-556 , ரஸ்ஸாக்-2004 , 2006 , அஹ்மத்-21265 , 21266 , தாரிமீ-1305 , அபூதாவூத்-554 , இப்னு குஸைமா-1477 , இப்னு ஹிப்பான்-2056 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1834 , 4774 , ஹாகிம்-904 , 905 , 910 , குப்ரா பைஹகீ-4964 ,


3 . அப்துல்லாஹ் பின் அபூபஸீர் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி)

பார்க்க : இப்னு ஹிப்பான்-2057 ,

4 . அபூஇஸ்ஹாக் —> அப்துல்லாஹ் பின் அபூஸுஃப்யான் —> உபை (ரலி)

பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-9217 ,

////அஹ்மத்-21267 , 21268 , 21270 , 21271 , 21272 , 21273 , 21274 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1413 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.