பாடம்:
பெரிய பள்ளிவாசலில் தொழுவதின் சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனது வீட்டில் ஒரு தொழுகை தொழுவது, ஒரு தொழுகைக்கு நிகராகும். தனது கூட்டத்தாரின் பள்ளிவாசலில் தொழுவது, 25 தொழுகைக்கு நிகராகும். மக்கள் ஒன்றுத்திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது 500 தொழுகைக்கு நிகராகும்.
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். எனது (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது ஒரு இலட்சம் தொழுகைக்கு நிகராகும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(இப்னுமாஜா: 1413)بَابُ مَا جَاءَ فِي الصَّلَاةِ فِي الْمَسْجِدِ الْجَامِعِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا رُزَيْقٌ أَبُو عَبْدِ اللَّهِ الْأَلْهَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«صَلَاةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِ مِائَةِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الْأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلَاةٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1413.
Ibn-Majah-Alamiah-1403.
Ibn-Majah-JawamiulKalim-1403.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . ஹிஷாம் பின் அம்மார்
3 . அபுல்கத்தாப்-ஹம்மாத் அத்திமிஷ்கீ
4 . ருஸைக்-அபூஅப்துல்லாஹ்
5 . அனஸ் (ரலி)
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13884-அபுல்கத்தாப்-ஹம்மாத் அத்திமிஷ்கீ என்பவரின் நிலை அறியப்படவில்லை. இவர் அறியப்படாதவர் என்று மிஸ்ஸீ இமாம், தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர். - அபுல்கத்தாப்-அத்திமிஷ்கீ என்ற பெயரில் மஃரூப் பின் அப்துல்லாஹ் அல்கய்யாத் என்பவர் உள்ளார். இவர் வேறு ஆவார் (இவர் பலவீனமானவர்). இந்த 2 பேரையும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் ஒருவராக கருதியுள்ளார். இது தவறு என்று மிஸ்ஸீ இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-33/281, அல்காஷிஃப்-5/40, லிஸானுல் மீஸான்-9/468, தஹ்தீபுத் தஹ்தீப்-4/517, தக்ரீபுத் தஹ்தீப்-1/1140)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ-15751-ருஸைக்-அபூஅப்துல்லாஹ் என்பவரை அபூஸுர்ஆ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் சுமாரானவர் என்ற தரத்தில் கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டும், இவர் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். இவை பலமானவர்களின் செய்திகளைப் போன்று இல்லை. எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/505, தஹ்தீபுல் கமால்-9/185, அல்இக்மால்-4/378, அல்காஷிஃப்-2/403, தஹ்தீபுத் தஹ்தீப்-1/606, தக்ரீபுத் தஹ்தீப்-1/326)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1413 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7008 ,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-171 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1190 , அபூதாவூத்-554 ,
சமீப விமர்சனங்கள்