நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது ஒப்புக்கொள்ளப்பட்ட கடமையான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். மேலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உபரியான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்.
மேலும் மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது மற்ற பள்ளிவாசலில் தொழுவதை விட 500 மடங்கு சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(almujam-alawsat-171: 171)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَمَّادِ بْنِ زُغْبَةَ قَالَ: نا زُهَيْرُ بْنُ عَبَّادٍ الرُّؤَاسِيُّ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ التَّمِيمِيُّ، عَنْ يُوسُفُ بْنُ زِيَادٍ، عَنْ نُوحِ بْنِ ذَكْوَانَ قَالَ: وَحَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ تَعْدِلُ الْفَرِيضَةَ حَجَّةً مَبْرُورَةً، وَالنَّافِلَةَ كَحَجَّةٍ مُتَقَبَّلَةٍ، وَفُضِّلَتِ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ عَلَى مَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ بِخَمْسِمائةِ صَلَاةٍ»
لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ نَافِعٍ إِلَّا عَطَاءٌ، وَلَا عَنْ عَطَاءٍ إِلَّا نُوحُ بْنُ ذَكْوَانَ، تَفَرَّدَ بِهِ: زُهَيْرُ بْنُ عَبَّادٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-171.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-178.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹம்மாத்
3 . ஸுஹைர் பின் அப்பாத்
4 . அப்துல்லாஹ் பின் முஹம்மத் அத்தமீமீ
5 . யூஸுஃப் பின் ஸியாத்
6 . நூஹ் பின் தக்வான்
7 . அதாஉ பின் அபூரபாஹ்
8 . நாஃபிஃ
9 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25411-அப்துல்லாஹ் பின் முஹம்மத் அத்தமீமி என்பவரை ஹதீஸை இட்டுக்கட்டக்கூடியவர் என்று வகீஃ பின் ஜர்ராஹ் அவர்கள் விமர்சித்துள்ளார். மேலும் பல அறிஞர்களும் இவரை முன்கருல் ஹதீஸ் என்றும், விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/428, தக்ரீபுத் தஹ்தீப்-1/544)
- 2 . மேலும் ராவீ-25411-யூஸுஃப் பின் ஸியாத், 3 . ராவீ-46747-நூஹ் பின் தக்வான் ஆகியோரை முன்கருல் ஹதீஸ் என்றும், பலவீனமானவர்கள் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/510, தஹ்தீபுத் தஹ்தீப்-4/246)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-171 ,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-1413 .
சமீப விமர்சனங்கள்