பாடம் : 209
சந்திக்க வருபவர் தொழுவித்தல்.
இந்த எங்களுடைய பள்ளிக்கு மாலிக் பின் ஷுவைரிஸ் வந்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அவரிடம் நீங்கள் முன்சென்று தொழுவியுங்கள் என்று சொன்னோம். அதற்கு அவர் உங்களில் ஒருவரை தொழுவிக்க முன்னிருத்துங்கள். உங்களுக்கு நான் ஏன் தொழுவிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவிக்கின்றேன். அதாவது ஒரு கூட்டத்தை சந்திக்க வந்திருப்பவர் அம்மக்களுக்கு தொழுவிக்க வேண்டாம்! அவர்களில் உள்ள ஒருவரே தொழுவிக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என்று அவர் அறிவித்தார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றிருக்கின்றது.
(அபூதாவூத்: 596)209- بَابُ إِمَامَةِ الزَّائِرِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ بُدَيْلٍ، حَدَّثَنِي أَبُو عَطِيَّةَ، مَوْلًى مِنَّا، قَالَ
كَانَ مَالِكُ بْنُ حُوَيْرِثٍ، يَأْتِينَا إِلَى مُصَلَّانَا هَذَا، فَأُقِيمَتِ الصَّلَاةُ فَقُلْنَا لَهُ: تَقَدَّمْ فَصَلِّهْ، فَقَالَ لَنَا: قَدِّمُوا رَجُلًا مِنْكُمْ يُصَلِّي بِكُمْ،
وَسَأُحَدِّثُكُمْ لِمَ لَا أُصَلِّي بِكُمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ زَارَ قَوْمًا فَلَا يَؤُمَّهُمْ، وَلْيَؤُمَّهُمْ رَجُلٌ مِنْهُمْ»
AbuDawood-Tamil-596.
AbuDawood-Shamila-596.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்