பாடம் : 210
இமாம் உயரமான இடத்தில் நின்று தொழுவித்தல்.
ஹுதைபா (ரலி) மதாயின் நகரத்தில் ஒரு கடையின் மீது நின்று தொழுவித்தார்கள். உடனே அபூமஸ்வூத் அவருடைய சட்டையை பிடித்து இழுத்தனர். அபூமஸ்வூத் தொழுது முடிந்ததும் இவ்வாறு தொழுவதை நபித்தோழர்கள் தடுத்துள்ளனர் என்ற விபரம் உனக்கு தெரியாதா? என்று ஹுதைபா (ரலி)யை நோக்கி கேட்டபோது, ஆம்! நீர் என்னை இழுக்கும் போதே நான் உணர்ந்து கொண்டேன் என்று ஹுதைபா (ரலி) பதில் சொன்னார் என ஹம்மாம் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 597)210- بَابُ الْإِمَامِ يَقُومُ مَكَانًا أَرْفَعَ مِنْ مَكَانِ الْقَوْمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، وَأَحْمَدُ بْنُ الْفُرَاتِ أَبُو مَسْعُودٍ الرَّازِيُّ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ
أَنَّ حُذَيْفَةَ، أَمَّ بِالْمَدَائِنِ عَلَى دُكَّانٍ، فَأَخَذَ أَبُو مَسْعُودٍ، بِقَمِيصِهِ فَجَبَذَهُ، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ قَالَ: «أَلَمْ تَعْلَمْ أَنَّهُمْ كَانُوا يُنْهَوْنَ عَنْ ذَلِكَ؟» قَالَ: «بَلَى، قَدْ ذَكَرْتُ حِينَ مَدَدْتَنِي»
AbuDawood-Tamil-597.
AbuDawood-Shamila-597.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்