ஒருவர் அம்மார் பின் யாஸிர் – உடன் மதாயினில் இருந்தார். அப்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அம்மார் முந்திக் கொண்டு ஒரு கடையின் மீது நின்று தொழுவிக்கலானார். அவருக்கு கீழே மக்கள் நின்று தொழுதனர். உடனே ஹுதைபா (ரலி) முந்திக் கொண்டு அம்மார் (ரலி)யின் இரு கைகளையும் பிடித்தார். தன்னை தொடர்ந்துவந்த அம்மாரை ஹுதைபா (ரலி) கீழே இறக்கிவிட்டார். அம்மார் (ரலி) தொழுகையை முடித்ததும் ஹுதைபா (ரலி)யை நோக்கி மக்களுக்கு தொழுவிக்கும் ஒருவர் மக்கள் தொழுகின்ற இடத்தை விட அல்லது அதுமாதிரியான இடத்தைவிட (மிக) உயரமான இடத்தில் நின்று தொழுவிக்ககூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீ செவியுறவில்லையா? என்று வினவினார். அதற்கு அம்மார் (ரலி) அதனால்தான் நீங்கள் என்னுடைய கைகளை பிடித்தவுடன் உங்களை தொடர்ந்து விட்டேன் என்று பதிலளித்தார்.
இவ்வாறு அம்மார் (ரலி)யுடன் இருந்த ஒருவர் அறிவித்ததாக அதீம் பின் சாபித் (ரலி) அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 598)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو خَالِدٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ، حَدَّثَنِي رَجُلٌ
أَنَّهُ كَانَ مَعَ عَمَّارِ بْنِ يَاسِرٍ بِالْمَدَائِنِ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَتَقَدَّمَ عَمَّارٌ وَقَامَ عَلَى دُكَّانٍ يُصَلِّي وَالنَّاسُ أَسْفَلَ مِنْهُ، فَتَقَدَّمَ حُذَيْفَةُ فَأَخَذَ عَلَى يَدَيْهِ فَاتَّبَعَهُ عَمَّارٌ، حَتَّى أَنْزَلَهُ حُذَيْفَةُ فَلَمَّا فَرَغَ عَمَّارٌ مِنْ صَلَاتِهِ قَالَ لَهُ حُذَيْفَةُ: أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أَمَّ الرَّجُلُ الْقَوْمَ فَلَا يَقُمْ فِي مَكَانٍ أَرْفَعَ مِنْ مَقَامِهِمْ» أَوْ نَحْوَ ذَلِكَ؟، قَالَ عَمَّارٌ: «لِذَلِكَ اتَّبَعْتُكَ حِينَ أَخَذْتَ عَلَى يَدَيَّ»
AbuDawood-Tamil-598.
AbuDawood-Shamila-598.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்