தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-601

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 212

இமாம் அமர்ந்த நிலையில் தொழவைப்பது பற்றிய பாடம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை சவாரி செய்த போது கீழே விழுந்து அவர்களுடைய வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டு விட்டது. இதனால் தொழுகைகளில் ஒரு தொழுகையை உட்கார்ந்து தொழுதார்கள். நாங்கள் அவர்களுக்கு பின்னால் உட்கார்ந்து தொழுதோம். அவர்கள் தொழுது முடித்ததும், இமாம் பின்பற்ற படுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கின்றார். எனவே அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள், அவர் ருகூஃ செய்தால் நீங்கள் ருகூஃ செய்யுங்கள் (ருகூஃவிலிருந்து) எழும்போது நீங்களும் எழுங்கள் அவர் ஸமியல்லாஹ் லிமன் ஹமிதா (புகழ்பவனின் புகழை அல்லாஹ் செவியேற்று விட்டான்) என்று சொன்னால் நீங்கள் றப்பனா வலக்கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் சொந்தம் என்று சொல்லுங்கள்) அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள். 

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 601)

212- بَابُ الْإِمَامِ يُصَلِّي مِنْ قُعُودٍ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَصُرِعَ عَنْهُ فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ فَصَلَّى صَلَاةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ، وَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا فَلَمَّا انْصَرَفَ، قَالَ: ” إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ


AbuDawood-Tamil-601.
AbuDawood-Shamila-601.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.