பாடம்:
கடமையான தொழுகையை தொழுத இடத்திலேயே நஃபிலான தொழுகையை இமாம் தொழுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் (கடமையான தொழுகையை) தொழுத இடத்திலிருந்து வேறு இடம் மாறுகின்ற வரை ஓர் இமாம் தான் தொழுத இடத்திலேயே தொழ வேண்டாம்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
இமாம் அபூதாவூத் கூறுகிறார்:
(முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அதாஉ பின் அப்துல்லாஹ் அல்குராஸானீ என்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை.
(அபூதாவூத்: 616)بَابُ الْإِمَامِ يَتَطَوَّعُ فِي مَكَانِهِ
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الْمَلِكِ الْقُرَشِيُّ، حَدَّثَنَا عَطَاءٌ الْخُرَاسَانِيُّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا يُصَلِّ الْإِمَامُ فِي الْمَوْضِعِ الَّذِي صَلَّى فِيهِ حَتَّى يَتَحَوَّلَ»
قَالَ أَبُو دَاوُدَ: عَطَاءٌ الْخُرَاسَانِيُّ لَمْ يُدْرِكِ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-616.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-520.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-23054-அப்துல்அஸீஸ் பின் அப்துல்மலிக் யாரென அறியப்படாதவர்; மேலும் ராவீ-28491-அதாஉ பின் அப்துல்லாஹ் அல்குராஸானீ என்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/614, தஹ்தீபுத் தஹ்தீப்-3/108)
- என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி), முஆவியா (ரலி) வழியாக வரும் சில செய்திகளின் மூலம் (பார்க்க: அபூதாவூத்-1006 , முஸ்லிம்-1603) இந்த பலவீனம் நீங்கிவிடுகிறது என்று கூறி இந்தக் கருத்தை சரியானது (ஸஹீஹுன் லிகைரீ) என்று கூறியுள்ளார். மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், முஆவியா (ரலி) அவர்களின் மூலமாக வரும் செய்தியின் மூலம் கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் சிறிது தாமதித்து அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்பே உபரியான தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
(நூல்: ஸஹீஹ் அபூதாவூத்-629, ஃபத்ஹுல் பாரீ-2/389)
1 . இந்தக் கருத்தில் முகீரா பின் ஷுஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1428 , அபூதாவூத்-616 , குப்ரா பைஹகீ-3043 ,
2 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரகுத்னீ-1090 .
3 . இப்னு அப்பாஸ், இப்னுஸ் ஸுபைர், அபூஸயீத், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-6012 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
…பார்க்க: புகாரி-848 , முஸ்லிம்-1603 , அபூதாவூத்-1006 ,
அதா பின் குராசானி முகீரா பின் ஷூஃபாவை சந்திக்கவில்லை எனும்போது இந்த ஹதீஸின் தரம் என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் இந்த செய்தி பற்றி கூடுதல் தகவல் பதிவு செய்யப்படும்.
முகீரா பின் ஷூஃபாவிடமிருந்து அறிவிக்கும் அதா பின் குரசானி முகீரா பின் ஷுஃபாவை சந்திக்கவில்லை என்பதால் இந்த ஹதீஸ் ஸஹீஹானதா? பலஹீனமானதா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். கருத்து சரியானது.