அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகையை கற்றுத் தந்தார்கள். அப்போது அவர்கள் தக்பீர் சொல்லி தன் இரு கைகளையும் உயர்த்தினார்கள். அவர்கள் ருகூஃ செய்யும் போது தனது இரு முட்டுக் கால்களுக்கிடையில் தன் இரு கைவிரல்களையும் கோர்த்து வைத்துக் கொள்வார்கள் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
இந்த செய்தி ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்களுக்கு கிடைத்தபோது “என்னுடைய சகோதரர் உண்மை சொல்லி விட்டார். இதை நாங்கள் (முன்பு) செய்து கொண்டிருந்தோம். பிறகு “நாங்கள் முட்டுக் கால்களை (கைவிரல்கால்) பிடிக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்கமா பின் கைஸ் (ரஹ்)
(அபூதாவூத்: 747)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ:
«عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ فَلَمَّا رَكَعَ طَبَّقَ يَدَيْهِ بَيْنَ رُكْبَتَيْهِ»
قَالَ: فَبَلَغَ ذَلِكَ سَعْدًا، فَقَالَ: صَدَقَ أَخِي، قَدْ كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أَمَرَنَا بِهَذَا يَعْنِي «الْإِمْسَاكَ عَلَى الرُّكْبَتَيْنِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-747.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-637.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இந்த செய்தியே மஹ்ஃபூள் ஆகும். இதற்கு எதிராக ஷாத் தரத்தில் அமைந்த செய்தியை பார்க்க: (திர்மிதீ-257 )
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-3974 , அபூதாவூத்-747 , முஸ்னத் பஸ்ஸார்-, நஸாயீ-1031 , குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா- தாரகுத்னீ-, ஹாகிம்- , குப்ரா பைஹகீ-,
சமீப விமர்சனங்கள்