தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-257

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், “தெரிந்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதது போன்று உங்களுக்கு தொழுது காட்டப்போகிறேன்” என்று கூறிவிட்டு தொழுதார்கள். அப்போது அவர்கள், (தொழுகையின்) ஆரம்பத்தில் ஒரு தடவையே இருகைகளையும் உயர்த்தினார்கள்.

அறிவிப்பவர்: அல்கமா பின் கைஸ் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாகவும் செய்திகள் வந்துள்ளன. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

(மேற்கண்ட செய்தியில் உள்ள-இருகைகளையும் தக்பீர் தஹ்ரீமாவின் ஆரம்பத்தில் மட்டுமே உயர்த்த வேண்டும்; ருகூவிற்கு செல்லும் முன்பும், ருகூவிலிருந்து எழுந்த பின்பும், இரண்டாவது ரக்அத்தின் இருப்பிலிருந்து எழும்போதும் இருகைகளை உயர்த்தக் கூடாது என்ற) இந்த சட்டத்தையே சில நபித்தோழர்கள், (அவர்களை அடுத்து வந்த) தாபிஈன்கள் போன்ற பல கல்வியாளர்கள் கூறுகின்றனர்.  ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் கருத்தும், கூஃபாவாசிகளின் கருத்தும் இதுவே!

(திர்மிதி: 257)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ:

«أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى، فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا فِي أَوَّلِ مَرَّةٍ»

وَفِي البَابِ عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ. حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ، وَبِهِ يَقُولُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالتَّابِعِينَ، وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ، وَأَهْلِ الكُوفَةِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-257.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-238.




  • இந்த செய்தி ஷாத் என்ற வகையில் பலவீனமானதாகும்.
  • இந்த செய்தியையும், இந்தக் கருத்தில் சில வார்த்தை மாற்றத்துடன் வரும் செய்தியையும் (பார்க்க: அபூதாவூத்-749) இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னுஅப்தில்பர் போன்ற இன்னும் பல அறிஞர்கள் பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

1 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறும் காரணம்: இந்த செய்தியை ஆஸிம் பின் குலைப் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் மட்டுமே இந்தக் கருத்தை அறிவித்துள்ளார். மற்றவர்கள் வேறு கருத்தை அறிவித்துள்ளனர். மற்றவர்கள் அறிவிக்கும் செய்தி பார்க்க: ( அபூதாவூத்-747 )

எனவே இதில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் தவறு செய்துவிட்டார் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-258)

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறும் காரணம்: ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் வகீஃ அவர்களின் அறிவிப்பில் தான், “முதல் தடவை தான் கைகளை உயர்த்துவார்கள்” என்றும், “ஒரு தடவை கைகளை உயர்த்திய பின் திரும்ப உயர்த்தமாட்டார்கள்” என்றும் வந்துள்ளது. ஆனால் ஆஸிம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு இத்ரீஸ் அவர்களின் அறிவிப்பில் அவ்வாறு வரவில்லை. மேலும் இப்னு இத்ரீஸ் ஹதீஸ்களை எழுதிவைக்கக் கூடியவர். அவரின் நூலைப் பார்த்த யஹ்யா பின் ஆதம் அவர்கள் “ஒரு தடவை கைகளை உயர்த்திய பின் திரும்ப உயர்த்தமாட்டார்கள்” என்ற வார்த்தை இப்னு இத்ரீஸ் அவர்களின் நூலில் இடம்பெறவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்கள். எனவே வகீஃ அவர்கள், சுயமாக இந்த வார்த்தையைக் கூறியுள்ளார் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்றோர் கூறியுள்ளனர்…

(நூல்: ஜுஸ்உ ரஃப்உல் யதைன், அத்தம்ஹீத்… )

3 . வகீஃ அவர்களிடமிருந்து தான் இந்த தவறு ஏற்பட்டுவிட்டது என அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கூறியதாக திர்மிதீ அவர்களும் கூறியுள்ளார். இப்னுல் கத்தான் அவர்களும் இதை மேற்கோள் காட்டியுள்ளார். (நூல்: அல்வஹ்ம் வல்ஈஹாம்… )

மேற்கண்ட தகவல்களின் மூலம் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்ற அறிஞர்கள் இந்த செய்தியில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
தவறிழைத்து விட்டார் என்று கூறியுள்ளனர். இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
திர்மிதீ போன்ற மற்ற அறிஞர்கள் இந்த செய்தியில் வகீஃ தவறிழைத்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

…ஆய்வில்…

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அல்கமா பின் கைஸ் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2441 , அஹ்மத்-3681 , அபூதாவூத்-748 , திர்மிதீ-257 , குப்ரா நஸாயீ-649 , 1100 , நஸாயீ-1026 , 1058 , முஸ்னத் அபீ யஃலா-5039 , 5040 , 5302 , ஷரஹ் மஆனில் ஆஸார்-1349 , 1350 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-5826 , தாரகுத்னீ-1133 , குப்ரா பைஹகீ-2531 , 2534 ,

  • இப்ராஹீம் அந்நகஈ —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2533 , 2534 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2458 , ஷரஹ் மஆனில் ஆஸார்-1363 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-5826 , அல்முஃஜமுல் கபீர்-9298 , 9299 , 9300 ,

2 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-749 .

  • ரஃப்உல் யதைன்-ருகூவிற்கு செல்லும் முன்பும், ருகூவிலிருந்து எழுந்த பின்பும், இரண்டாவது ரக்அத்தின் இருப்பிலிருந்து எழும்போதும் இருகைகளையும் உயர்த்த வேண்டும் என்பதற்கு ஏராளமான சரியான ஹதீஸ்கள் வந்துள்ளன என்பதால் அவைகளே சரியானவைகளாகும். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள் இது பற்றி தனியாக ஒரு நூலைத் தொகுத்துள்ளார் என்பது ஹதீஸ்கலை அஞர்களுக்கிடையில் பிரபல்யமான செய்தியாகும்.
  • ரஃப்உல் யதைன் சம்பந்தமான ஹதீஸ்கள்:

பார்க்க: புகாரி-735 .

4 comments on Tirmidhi-257

  1. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் வழியாக வரும் செய்தி அப்துல்லாஹ் பின் முபாரக்,அஹ்மத் இப்னு ஹம்பல்,தாருக்குத்னீ,பைஹகீ,பஸ்ஸார் போன்ற அறிஞர்கள் பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்

    இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தங்களுடைய நூலான தக்லீஸ் அல் கபீர்- 1/221-223 கூறுகிறார்கள்

    கைகளை உயர்த்த கூடாது என்பது பற்றி எவ்வித நபிதோழர்கள் வழியாக ஆதாரபூர்வமான செய்தி இல்லை என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள்

    இமாம் நவவி அவர்களுடைய அல் மஜ்மூ-3/399-406

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இமாம்கள் இந்த செய்தியை பலவீனம் என்று சொல்வதற்கு என்ன காரணத்தை கூறியுள்ளார்கள் என்பதையும் சேர்த்து குறிப்பிடுவது சிறந்தது.

  2. தொழுகையில் நான்கு இடங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்பது 15 மேற்பட்ட நபிதோழர்கள் வழியாக முத்தவாதீர் செய்தியாக இடம் பெற்றுள்ளது

    ஆனால் நபிதோழர்களில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் உடைய செய்தி மட்டும் கைகளை உயர்த்த மாட்டார்கள் என்று தனித்து செல்கிறது …

    அதனால் பல அறிஞர்கள் இந்த ஹதீஸ் ஷாக் என்று கூறி பலவீனமான படுத்துகிறார்கள்..இந்த செய்தியின் மைய கருத்தில் தவறு ஏற்பட்டுள்ளது என்று அபு ஹாத்தீம் அவர்களும் கூறியுள்ளார்கள்

  3. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் கைகளை உயர்த்த மாட்டார்கள் என்று செய்தி வருகிறது.ஆனால் கைகளை உயர்த்த வேண்டும் என்று 50 மேற்பட்ட நபிதோழர்கள் வழியாக செய்தி வருகிறது. அதில் 10 பேர் சொர்க்கத்தில் நற்செய்தி கூறப்பட்ட வர்கள் வழியாகவும் செய்தி உள்ளது.
    எதிர்மறையான ஆதாரங்களை விட நேர்மறை ஆதாரத்திற்கு முன்னுரிமை உள்ளது என்று இமாம் ஈராக்கீ கூறுகிறார்கள்

    தரஹ் அத் தத்ரீப்-2/254

    இமாம் புகாரி அவர்கள் கைகளை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸ்கள் “ஜுஸ் அல் ரஃபாயாதீன்” என்ற நூலை தொகுத்துள்ளார்கள்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.