தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-859

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஏழு அறிவிப்புகளில் ஐந்தாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“(தொழுகைக்கு) நீ நின்றால் கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கூறி பின்பு ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தையும், மேலும், நீ எதை ஓத அல்லாஹ் நாடுவானோ அதையும் (துணை அத்தியாயத்தையும்) ஓது. நீ ருகூஉ செய்தால் உனது முழங்காலின் மீது உனது உள்ளங்கையை வைத்து உனது முதுகை நேராக நிமிர்த்தி வை. நீ ஸஜ்தா செய்தால் (நெற்றியைப் பூமியில் பதித்து) உறுதியாக ஸஜ்தா செய்.

(ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தினால் உனது (வலதுகாலை நட்டுவைத்து) இடது தொடையின் மீது அமர்ந்து கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது).

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)

 

(அபூதாவூத்: 859)

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، – بِهَذِهِ الْقِصَّةِ -، قَالَ:

«إِذَا قُمْتَ فَتَوَجَّهْتَ إِلَى الْقِبْلَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ، وَبِمَا شَاءَ اللَّهُ أَنْ تَقْرَأَ، وَإِذَا رَكَعْتَ فَضَعْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ، وَامْدُدْ ظَهْرَكَ»، وَقَالَ: «إِذَا سَجَدْتَ فَمَكِّنْ لِسُجُودِكَ، فَإِذَا رَفَعْتَ فَاقْعُدْ عَلَى فَخِذِكَ الْيُسْرَى»


Abu-Dawood-Tamil-730.
Abu-Dawood-TamilMisc-730.
Abu-Dawood-Shamila-859.
Abu-Dawood-Alamiah-730.
Abu-Dawood-JawamiulKalim-731.




  • அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் அம்ர் அவர்களின் அறிவிப்பில் அலீ பின் யஹ்யாவிற்கும், ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) அவர்களுக்கும் இடையில் யஹ்யா பின் கல்லாத் என்பவர் கூறப்படாமல் தான் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நூலின் மற்ற பெரும்பாலான பிரதிகளில் இந்தச் செய்தி வந்துள்ளது. மேலும் துஹ்ஃபதுல் அஷ்ராஃப், அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நூலின் விளக்கவுரைகளிலும் யஹ்யா பின் கல்லாத் கூறப்படவில்லை. எனவே இதில் அலீ பின் யஹ்யா அவர்கள் தனது தந்தை-யஹ்யா பின் கல்லாதிடமிருந்து அறிவிப்பதாக வந்திருப்பது தவறாகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அலீ பின் யஹ்யா என்ற அறிவிப்பாளருக்கு பின், யஹ்யா பின் கல்லாத் விடப்பட்டுள்ளார். இந்தக் கருத்தில் வரும் மற்ற பெரும்பாலான அறிவிப்பாளர்தொடர்களில் யஹ்யா பின் கல்லாத் கூறப்பட்டுள்ளார். எனவே இது ஷாத் என்பதால் பலவீனமானதாகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-858 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.