…ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(al-adabul-mufrad-61: 61)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا الْخَزْرَجُ بْنُ عُثْمَانَ أَبُو الْخَطَّابِ السَّعْدِيُّ قَالَ: أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ:
جَاءَنَا أَبُو هُرَيْرَةَ عَشِيَّةَ الْخَمِيسِ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ: أُحَرِّجُ عَلَى كُلِّ قَاطِعِ رَحِمٍ لَمَا قَامَ مِنْ عِنْدِنَا، فَلَمْ يَقُمْ أَحَدٌ حَتَّى قَالَ ثَلَاثًا، فَأَتَى فَتًى عَمَّةً لَهُ قَدْ صَرَمَهَا مُنْذُ سَنَتَيْنِ، فَدَخَلَ عَلَيْهَا، فَقَالَتْ لَهُ: يَا ابْنَ أَخِي، مَا جَاءَ بِكَ؟ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ كَذَا وَكَذَا، قَالَتِ: ارْجِعْ إِلَيْهِ فَسَلْهُ: لِمَ قَالَ ذَاكَ؟ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ عَلَى اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى عَشِيَّةَ كُلِّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلَا يَقْبَلُ عَمَلَ قَاطِعِ رَحِمٍ»
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-61.
Al-Adabul-Mufrad-Shamila-61.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-61.
إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات وصدوقيين عدا الخزرج بن عثمان السعدي وهو مقبول (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்களில் வரும் கஸ்ரஜ் பின் உஸ்மான் அவர்கள் பற்றி இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு ஷாஹீன் பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
போன்றோர் பலமானவர் என்றும், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவர் விடப்படுவதற்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார். - (நூல் : இக்மாலு தஹ்தீபுல் கமால்- 1373 பாகம் : 4, பக்கம் : 183)
இந்த ஹதீஸின் இறுதியில் வரும் “ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்” என்ற செய்தி அஹ்மத்-7639 எண்ணில் சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.
மேலும் பார்க்க: அஹ்மத்-10272 .
…
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல் அதபுல் முஃப்ரத் லில் புகாரி ஹதீஸ் எண் 707ன் தமிழாக்கத்தினை வெளியிடவும். ஜஸாக்கல்லாஹு க்ஹைரா.
வ அலைக்கும் ஸலாம்.
பார்க்க: புகாரி-707
ஆனால் புகாரியின் இந்த ஹதீஸுக்கு என்ன சம்பந்தம் உள்ளது. நீங்கள் கூறும் புகாரி-707 இன் அரபு ஹதீஸை பதிவிடவும்.