தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-964

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவரின் கால் மரத்துப் போகும் போது என்ன கூறவேண்டும்?

அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) இப்னு உமர் (ரலி) அவர்களின் கால் மரத்துப் போய்விட்டது. அப்போது ஒருவர் அவர்களிடம், “மக்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவரை நினையுங்கள்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள், “யா முஹம்மத்” என்று கூறினார்கள். (மரத்துப் போன அவர்களின் கால் சரியாகிவிட்டது)

(al-adabul-mufrad-964: 964)

بَابُ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا خَدِرَتْ رِجْلُهُ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ قَالَ:

خَدِرَتْ رِجْلُ ابْنِ عُمَرَ، فَقَالَ لَهُ رَجُلٌ: اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ، فَقَالَ: يَا مُحَمَّدُ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-964.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-959.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன் அல்முலாஈ

3 . ஸுஃப்யான் ஸவ்ரீ

4 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ-அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்

5 . அப்துர்ரஹ்மான் பின் ஸஃத்

6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார்.
  • இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
  • மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 121/130
    அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
    இறப்பு ஹிஜ்ரி 310
    வயது: 86
    அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 338
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)

ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
போன்ற இன்னும் சிலர், இவரிடம் ஆரம்ப காலத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதால் இதில் முதல் விமர்சனம் இல்லை.

என்றாலும் இவர் வழியாக வரும் எந்தச் செய்தியிலும் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக குறிப்பிடவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


(மேலும் இந்தச் செய்தியின் கருத்தும் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் கொள்கைக்கும் மாற்றமானதாகும். ஒருவருக்கு துன்பம் ஏற்படும் போது அல்லாஹ்வையே நினைவு கூறவேண்டும்.

இதில் தனக்கு பிடித்தமானவரை நினைவு கூறவேண்டும் என்று உள்ளது. சிலர் இப்படி தனக்கு பிடித்தமானவரை நினைவு கூறும்போது இரத்த ஓட்டம் சீராக நடைப்பெற்று சரியாகிவிடும் என்று விளக்கம் கூறியுள்ளனர். என்றாலும் இதில் இணைவைப்பு இருப்பதால் இதை செயல்படுத்த முடியாது.

வேறு சிலர் இதில் இறந்துபோனவர்களை அழைத்து உதவி தேடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும்; இதில் பெயர் கூறுவது மட்டுமே உள்ளது என்றும் விளக்கம் கூறியுள்ளனர்.

கால்கள் மரத்துப் போனால் அதை குறிப்பிட்ட முறையில் அசைத்தாலே சரியாகி விடும்.)


இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்களிடமிருந்து 5 பேர் அறிவித்துள்ளனர்.

1 . ஸுஃப்யான் ஸவ்ரீ

2 . ஸுஹைர் பின் முஆவியா

3 . ஷுஅபா

4 . இஸ்ராயீல் பின் யூனுஸ்

5 . அபூபக்ர் பின் அய்யாஷ்.

இவர்கள் வழியாக முரண்பட்ட அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தி வந்துள்ளது.

1 . ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஹைர் பின் முஆவியா ஆகியோர், அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ —> அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

2 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள், அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ —> பெயர் குறிப்பிடப்படாத மனிதர் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

3 . இஸ்ராயீல் பின் யூனுஸ் அவர்கள், அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ —> ஹைஸம் பின் ஹனஷ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

4 . அபூபக்ர் பின் அய்யாஷ் அவர்கள், அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ —> அபூஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

இந்த அனைத்து வகையான அறிவிப்பாளர்தொடர்களிலும் அபூஇஸ்ஹாக் அவர்கள் தத்லீஸ் செய்துள்ளார் என்பதுடன் அவரின் ஆசிரியர்களின் பெயர்கள் பலவாறு கூறப்பட்டிருப்பதாலும், அவர்கள் அறியப்படாதவர்கள் என்பதாலும் இது பலவீனமான செய்தியாகும்.


تاريخ ابن معين – رواية الدوري (4/ 24):
2953 – سَمِعت يحيى يَقُول الحَدِيث الَّذِي يَرْوُونَهُ ‌خدرت ‌رجل بن عمر وَهُوَ أَبُو إِسْحَاق عَن عبد الرَّحْمَن بن سعد قيل ليحى من عبد الرَّحْمَن بن سعد قَالَ لَا أَدْرِي شكّ الْعَبَّاس سعيد أَو سعد

இந்தச் செய்தியில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் அல்லது ஸயீத் யார்? என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், அவர் பற்றி தனக்கு தெரியவில்லை என்று கூறினார் என அப்பாஸ் அத்தூரீ அவர்கள் அறிவித்துள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-2953)


இவர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களின் அடிமை என்ற தகவலை மிஸ்ஸீ இமாம் கூறியுள்ளார். இவரின் நிலைப் பற்றி அறியப்படவில்லை.

அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் அல்மதனீ, அல்அஃரஜ் என்று ஒருவர் உள்ளார். இவரை பலமானவர் என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் கூறியுள்ளார். சிலர் மேற்கண்ட செய்தியை அறிவிப்பவர் இந்த அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் என்று கருதிக் கொண்டு இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர். இது தவறாகும்…


3140- وسئل عن حديث أبي عبيد، عن ابن عمر؛ أن رجله خدرت، فجلس، فقال له: اذكر أحب الناس، فقال: يا محمداه فانتشرت، فقام.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو إِسْحَاقَ السَّبِيعِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عن أبي سعد، عن ابن عمر.
ورواه الثوري، عن أبي إسحاق، عن عبد الرحمن، مولى عمر بن الخطاب، عن ابن عمر.
وقال زهير: عن أبي إسحاق، عن عبد الجبار بن سعيد، عن ابن عمر.
قال إسرائيل: عن أبي إسحاق، عن ابن عمر مرسلا.
وهو مجهول.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السُّكَيْنِ، قَالَ: حدثنا إسحاق بن زريق، قال: حدثنا إبراهيم بن خالد، قال: حدثنا رباح بن زيد، قال: حدثنا أبوعبد الرحمن الخراساني، يعني ابْنُ الْمُبَارَكِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عن عبد الرحمن، مولى ابن الخطاب، قال: خدرت رجل ابن عمر، فقال له إنسان: اذكر أحب الناس إليك، فقال: يا محمد.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இதை இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் (ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் அறிவிப்பின்படி) உமர் (ரலி) அவர்களின் அடிமையான அப்துர்ரஹ்மான் என்பவர் ஆவார். இவர் யார் என அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3140)


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தபகாதுல் குப்ரா-5121, அல்அதபுல் முஃப்ரத்-964, ஃகரீபுல் ஹதீஸ்-, முஸ்னத் இப்னுல் ஜஃத்-2539, தஹ்தீபுல் கமால்-, அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-172, 168, 170,


ஃகரீபுல் ஹதீஸ்-,

غريب الحديث لإبراهيم الحربي (2/ 673)
حَدَّثَنَا عَفَّانُ , حَدَّثَنَا شُعْبَةُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَمَّنْ سَمِعَ ابْنَ عُمَرَ , قَالَ: «خَدِرَتْ رِجْلُهُ» , فَقِيلَ: اذْكُرْ أَحَبَّ النَّاسِ , قَالَ: «يَا مُحَمَّدُ»


ஃகரீபுல் ஹதீஸ்-,

غريب الحديث لإبراهيم الحربي (2/ 674)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ , حَدَّثَنَا زُهَيْرٌ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ: جِئْتُ ابْنَ عُمَرَ فَخَدِرَتْ رِجْلُهُ , فَقُلْتُ: مَالِرِجْلِكَ؟ قَالَ: «اجْتَمَعَ عَصَبُهَا» , قُلْتُ: ادْعُ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ , قَالَ: «يَا مُحَمَّدُ» : فَبَسَطَهَا


  • முஸ்னத் இப்னுல் ஜஃத்-2539.

مسند ابن الجعد (ص: 369)
2539 – وَبِهِ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ قَالَ: كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فُخَدِّرَتْ رِجْلُهُ فَقُلْتُ لَهُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا لِرِجْلِكَ؟ قَالَ: ” اجْتَمَعَ عَصَبُهَا مِنْ هَاهُنَا، قُلْتُ: ادْعُ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ، قَالَ: يَا مُحَمَّدُ، فَانَبْسَطَتْ “


தஹ்தீபுல் கமால்-,

تهذيب الكمال في أسماء الرجال (17/ 143)
أَخْبَرَنَا بِهِ أَبُو الحسن بْن البخاري، وزينب بنت مكي، قَالا: أخبرنا أَبُو حفص بن طبرزذ، قال: أخبرنا الْحَافِظُ أَبُو الْبَرَكَاتِ الأنماطي، قال: أَخْبَرَنَا أبو مُحَمَّد الصريفيني، قال: أَخْبَرَنَا أبو القاسم بْنِ حُبَابَةَ، قال: أَخْبَرَنَا عَبد الله بْن مُحَمَّد البغوي، قال: حَدَّثَنَا علي بْن الجعد، قال: أَخْبَرَنَا زُهَيْرٌ، عَن أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْد الرَّحْمَنِ بْن سَعْد، قال: كنت عِنْدَ عَبد اللَّهِ بْنِ عُمَر، فَخُدِّرَتْ رِجْلُهُ، فَقُلْتُ له: يا عَبْدِ الرَّحْمَنِ مَا لِرِجْلِكَ؟ قال: اجْتَمَعَ عَصَبُهَا مِنْ هَاهُنَا. قال: قُلْتُ: ادْعُ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ، فَقَالَ: يَا مُحَمَّدُ، فَانْبَسَطَتْ.
رَوَاهُ عَن أَبِي نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَن أَبِي إِسْحَاقَ مُخْتَصَرًا.


  • அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-172.

عمل اليوم والليلة لابن السني (ص: 142)
172 – أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ الْحَسَنِ الصُّوفِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، ثنا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، قَالَ: ” كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ، فَخَدِرَتْ رِجْلُهُ، فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا لِرِجْلِكَ؟ قَالَ: اجْتَمَعَ عَصَبُهَا مِنْ هَاهُنَا. قُلْتُ: ادْعُ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ. فَقَالَ: يَا مُحَمَّدُ. فَانْبَسَطَتْ “


  • அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-168.

عمل اليوم والليلة لابن السني (ص: 141)

168 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْأَنْمَاطِيُّ، وَعَمْرُو بْنُ الْجُنَيْدِ بْنِ عِيسَى، قَالَا: ثنا مُحَمَّدُ بْنُ خِدَاشٍ، ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، ثنا أَبُو إِسْحَاقَ السَّبِيعِيُّ، عَنْ أَبِي شُعْبَةَ، قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَخَدِرَتْ رِجْلُهُ، فَجَلَسَ، فَقَالَ لَهُ رَجُلٌ: اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ. فَقَالَ: «يَا مُحَمَّدَاهُ فَقَامَ فَمَشَى»


  • அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-170.

عمل اليوم والليلة لابن السني (ص: 141)
170 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ مُحَمَّدٍ الْبَرْذَعِيُّ، ثنا حَاجِبُ بْنُ سُلَيْمَانَ، ثنا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْهَيْثَمِ بْنِ حَنَشٍ، قَالَ: كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَخَدِرَتْ رِجْلُهُ، فَقَالَ لَهُ رَجُلٌ: ” اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ. فَقَالَ: يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَقَامَ فَكَأَنَّمَا نَشِطَ مِنْ عِقَالٍ “

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னுஸ் ஸன்னீ

2 . முஹம்மத் பின் காலித் அல்பர்தஈ

3 . ஹாஜிப் பின் ஸுலைமான்

4 . முஹம்மத் பின் முஸ்அப்

5 . இஸ்ராயீல் பின் யூனுஸ்

6 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ

7 . ஹைஸம் பின் ஹனஷ்

8 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் உஸ்மான் —> முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-169,

عمل اليوم والليلة لابن السني (ص: 141)
169 – حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عِيسَى أَبُو أَحْمَدَ، ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رَوْحٍ، ثنا سَلَّامُ بْنُ سُلَيْمَانَ، ثنا غِيَاثُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خَيْثَمٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: خَدِرَتْ رِجْلُ رَجُلٍ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ. فَقَالَ: مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَذَهَبَ خَدَرَهُ

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னுஸ் ஸன்னீ

2 . ஜஃபர் பின் ஈஸா-அபூஅஹ்மத்

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ் பின் ரவ்ஹ்

4 . ஸல்லாம் பின் ஸுலைமான்

5 . ஃகியாஸ் பின் இப்ராஹீம்

6 . அப்துல்லாஹ் பின் உஸ்மான்

7 . முஜாஹித்

8 . இப்னு அப்பாஸ் (ரலி)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33249-ஃகியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் பற்றி இவர் ஹதீஸை பொய்யாக இட்டுக்கட்டக் கூடியவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்ராஹீம் பின் யஃகூப், ஸாலிஹ் ஜஸரா போன்ற பலரும் கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவரின் ஹதீஸ்களில் எது சரியானது என்றும்; எது தவறானது என்றும் அறியமுடியாது என்பதால் அறிஞர்கள் இவரை கைவிட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார்.
  • மேலும் பல அறிஞர்கள் இவர் விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/57, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/113, தாரீகுல் இஸ்லாம்-4/474, லிஸானுல் மீஸான்-6/311)

எனவே இது மவ்ளூஃவான அறிவிப்பாளர் தொடராகும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.