பாடம்:
ஜனாஸா, வியாபாரம், திருமணம் குறித்து வந்துள்ள சில செய்திகளில் உள்ள குறைபாடுகள்.
அபூமுஹம்மத்-இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:
அவ்ஸாஈ அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகைகளில் தக்பீர் கூறினார்கள்” என்று அறிவிக்கும் செய்தி பற்றி எனது தந்தையிடமும், அபூஸுர்ஆ அர்ராஸீ அவர்களிடமும் கேட்டேன்.
அதற்கவர்கள், இந்த செய்தியை இஸ்மாயில் பின் அய்யாஷ், அபுல் முஃகீரா ஆகியோர் தான் மவ்ஸூலாக அறிவித்துள்ளனர். (மற்றவர்கள் இவ்வாறு மவ்ஸூலாக அறிவிக்காமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்) என்று கூறினார்கள்.
(alilal-ibn-abi-hatim-1026: 1026)ذكر علل أخبار رويت في الجنائز والبيوع وأول النكاح.
قال أبو محمد : سألتُ أبِي ، وأبا زُرعة عن رِوايةِ الأوزاعِيِّ عن يحيى بنِ أبِي كثِيرٍ ، عن أبِي سلمة ، عن أبِي هُريرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم :
أنّهُ كبّر فِي الصّلاةِ على الجنائِزِ.
فقال : إِنّهُ لاَ يُوصِلُونهُ يقُولُون : عن أبِي سلمة ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم مُرسلٌ ، إِلاَّ إِسماعِيل بن عيّاشٍ ، وأبو المُغِيرةِ ، فإِنّهُما رويا عنِ الأوزاعِيِّ كذلِك.
Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-1026.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்