தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-2361

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தனது வயிற்றில் (இயற்கைத் தேவை போன்ற) எதையாவது உணர்ந்தால் அப்போது தொழ (நிற்க) மாட்டார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

(almujam-alawsat-2361: 2361)

وَعَنْ عَائِشَةَ، قَالَتْ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي وَهُوَ يَجِدُ فِي بَطْنِهِ شَيْئًا

لَمْ يَرْوِ هَذَيْنِ الْحَدِيثَيْنِ عَنْ أَبِي مَعْشَرٍ إِلَّا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-2361.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-2419.




இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர் – தப்ரானி நூலின் ஆசிரியர் ஸுலைமான் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> இப்ராஹீம் பின் முஹம்மத் —> முஹம்மது பின் பக்கார் —> நஜீஹ் பின் அப்துர்ரஹ்மான் (அபூமஃஷர்)  —> ஹிஷாம் —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46292-நஜீஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூமஃஷர் நல்லவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், பலவீனமானவர் என்றும், அறிவிப்பாளர்தொடரில் தவறிழைப்பவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/214, தக்ரீபுத் தஹ்தீப்-1/998)

(நூல்: இர்ஷாதுல் காஸீ, வத்தானீ-32)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • மேலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர் தவறு என்றும் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-237)

மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.