தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-2757

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் நீரோடை ஓடும் பள்ளமான இடத்தில் விரைந்து நடந்தால், “அல்லாஹும் மஃக்ஃபிர் வர்ஹம், வ அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! மன்னிப்பாயாக! மேலும், கருணை காட்டுவாயாக! நீயே எல்லோரையும்விட மிகவும் கண்ணியமானவனும், மிக்க கொடையாளியும் ஆவாய்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து லைஸ் பின் அபூஸுலைம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அப்துல்வாரிஸ் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

(almujam-alawsat-2757: 2757)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: نا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ قَالَ: نا لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَعَى فِي بَطْنِ الْمَسِيلِ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْ، وَأَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ إِلَّا لَيْثٌ، تَفَرَّدَ بِهِ عَبْدُ الْوَارِثِ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-2757.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-2836.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத்

2 . இப்ராஹீம் பின் ஹாஷிம்-அபூஇஸ்ஹாக்-அல்பஃகவீ

3 . இப்ராஹீம் பின் ஹஜ்ஜாஜ்-அஸ்ஸாமீ

4 . அப்துல்வாரிஸ் பின் ஸயீத்-அல்அன்பரீ

5 . லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன்

6 . அபூஇஸ்ஹாக்-அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்- அஸ்ஸபீஈ

7 . அல்கமா பின் கைஸ்-அன்னகஈ

8 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)-இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக் குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)


மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-15565.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.