தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-15565

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது பத்னுல் வாதீ எனும்) பள்ளத்தின் நடுவில் வேகமாகச் செல்லும்போது, “ரப்பிஃக்ஃபிர் வர்ஹம் இன்னக்க அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறிவந்தார்கள்.

(பொருள்: என் இரட்சகனே! மன்னிப்பாயாக. கிருபை செய்வாயாக. நிச்சயமாக நீயே எல்லோரையும்விட மிக கண்ணியமானவனும், மிக்க கொடை வள்ளலும் ஆவாய்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 15565)

حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ قَالَ:

كَانَ عَبْدُ اللَّهِ إِذَا سَعَى فِي بَطْنِ الْوَادِي قَالَ: «رَبِّ اغْفِرْ وَارْحَمْ إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-15565.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-18404.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபூஷைபா இமாம்-அபூபக்ர்-அப்துல்லாஹ் பின் முஹம்மத்

2 . அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்

3 . அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்

4 . ஷகீக் பின் ஸலமா-அபூவாஇல் (ரஹ்)


இந்தக் கருத்தில் வரும் செய்திகள் நபித்தோழர்களின் செயல்களாக வந்துள்ளன. நபியின் செயலாக வந்துள்ள செய்தி பலவீனமானது.

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2757.


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-15565, 15566, அல்முஃஜமுல் அவ்ஸத்-2757, குப்ரா பைஹகீ-9351, …


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: .. முன்கதிஃயான செய்தி.



 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.