பாடம்:
ஸலாமா என்ற பெயருடையவர்களின் அறிவிப்புகள்.
நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லவில்லை. சிறுநீர் கழித்தப் பின் நபி (ஸல்) அவர்கள் (தமது இருகைகளையும் தரையில் அடித்து தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவி) தயம்மும் செய்த பின்னர் அவரின் ஸலாமுக்கு பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-3641: 3641)مَنِ اسْمُهُ سَلَامَةُ
حَدَّثَنَا سَلَامَةُ بْنُ نَاهِضٍ الْمَقْدِسِيُّ قَالَ: نا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: نا مَسْلَمَةُ بْنُ عُلَيٍّ قَالَ: نا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«مَرَّ رَجُلٌ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ، فَلَمَّا فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ فَتَيَمَّمَ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الْأَوْزَاعِيِّ، إِلَّا مَسْلَمَةُ بْنُ عَلِيٍّ، تَفَرَّدَ بِهِ هِشَامُ بْنُ عَمَّارٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3641.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3767.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ மஸ்லமா பின் அலீ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்றும் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கிப்பட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/76, தக்ரீபுத் தஹ்தீப்-1/943)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-351 .
சமீப விமர்சனங்கள்