தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-4278

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: “முஹம்மதே! நீங்கள் விரும்பும் காலம் வரை வாழலாம். ஆனால், நீங்கள் (ஒரு நாள்) மரணிப்பீர்கள். நீங்கள் விரும்பும் செயல்களை செய்துக் கொள்ளலாம். ஆனால், அதற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் விரும்பியவரை நேசித்துக் கொள்ளலாம். ஆனால் (ஒரு நாள்) நீங்கள் அவரை பிரிவீர்கள்.

மேலும் அறிந்துகொள்ளுங்கள்: ஒரு இறைநம்பிக்கையாளரின் சிறப்பு அவரது இரவுத் தொழுகையில் உள்ளது. அவரது கண்ணியம், மக்களை விட்டு அவர் தேவையற்றவராக இருப்பதில் உள்ளது.


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை முஹம்மத் பின் உயைனா அவர்களிடமிருந்து ஸாஃபிர் பின் ஸுலைமான் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

முஹம்மத் பின் உயைனா அவர்கள், ஸுஃப்யான் பின் உயைனா அவர்களின் சகோதரர் ஆவார்.

(almujam-alawsat-4278: 4278)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ قَالَ: نا زَافِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ:

جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ، وَأَحْبِبْ مَنْ شِئْتَ فَإِنَّكَ مُفَارِقُهُ، وَاعْلَمْ أَنَّ شَرَفَ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ، وَعِزِّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ عُيَيْنَةَ إِلَّا زَافِرٌ وَمُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ:، أَخُو سُفْيَانَ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4278.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4410.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல்

3 . முஹம்மத் பின் ஹுமைத்-அர்ராஸீ

4 . ஸாஃபிர் பின் ஸுலைமான்

5 . முஹம்மத் பின் உயைனா

6 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்

7 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


 

 

 


மேலும் பார்க்க: ஹாகிம்-7921.

2 comments on Almujam-Alawsat-4278

    1. வ அலைக்கும் ஸலாம்.
      இந்தக் கருத்து பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அனைத்திலும் விமர்சனம் உள்ளது என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். (மிகப்பலவீனமானவர்கள் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர்களைத் தவிர்த்து வேறு சில பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களை சேர்த்தே இந்தச் செய்தியை சிலர் ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறியுள்ளனர்.)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.