அகீகா(வாக கொடுக்கப்படும் பிராணியை) ஏழாவது நாள் அல்லது பதினான்காம் நாள் அல்லது இருபத்து ஒன்றாம் நாள் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
(almujam-alawsat-4882: 4882)حَدَّثَنَا عَيَّاشُ بْنُ مُحَمَّدٍ الْجَوْهَرِيُّ الْبَغْدَادِيُّ قَالَ: نَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ، أَوْ أَرْبَعَ عَشْرَةَ، أَوْ إِحْدَى وَعِشْرِينَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ قَتَادَةَ إِلَّا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4882.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5024.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்மாயீல் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பலவீனமானவர்.
- இவர் ஒரே ஹதீஸை எங்களிடம் மூன்று முறைகளில் அறிவிப்பார் என்று கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
- இவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியுள்ளார்கள். - இவருடைய ஹதீஸ்களை எழுதுக்கூடாது என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
குறிப்பிட்டுள்ளார்கள். - இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் அதிகமாக தவறாக அறிவிப்பவர் என்று ஃபல்லாஸ் குறிப்பிட்டுள்ளார்கள்.
- இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானீ குறிப்பிட்டுள்ளார்கள்.
- இவரை யஹ்யா, இப்னு மஹ்தீ ஆகியோர் (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால்) விட்டுவிட்டார்கள் என்று இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
கூறியுள்ளார்கள். - இதைப்போன்று இவர் ஹதீஸ்கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
கூறியுள்ளார்கள். - இவருடைய ஹதீஸ்கள் பாதுகாப்பானவை அல்ல என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்கள். - இவர் பிரபல்யமானவர்களிடமிருந்து மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர்; அறிவிப்பாளர் வரிசையை மாற்றும் பலவீனமானவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 1 பக்கம்: 289.
3 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4882, அல்முஃஜமுஸ் ஸகீர்-723, குப்ரா பைஹகீ-19293,
சரியான ஹதீஸ் பார்க்க: நஸாயீ-4220.
மேலும் பார்க்க: புகாரி-5471.
சமீப விமர்சனங்கள்