அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை தூய்மைப் படுத்துவான். யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அல்லாஹ்வே! இவர் இரவில் உளூவுடன் இருப்பது போன்று, நீயும் உனது (இந்த) அடியாரை (பாவமென்னும் அசுத்தத்தை) விட்டு மன்னிப்பாயாக! என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(almujam-alawsat-5087: 5087)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُؤَدِّبُ قَالَ: نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ قَالَ: نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عُتْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«طَهِّرُوا هَذِهِ الْأَجْسَادَ طَهَّرَكُمُ اللَّهُ، فَإِنَّهُ لَيْسَ مِنْ عَبْدٍ يَبِيتُ طَاهِرًا إِلَّا بَاتَ مَعَهُ فِي شِعَارِهِ مَلَكٌ، لَا يَنْقَلِبُ سَاعَةً مِنَ اللَّيْلِ إِلَّا قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ إِلَّا الْعَبَّاسُ بْنُ عُتْبَةَ، تَفَرَّدَ بِهِ: إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5087.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5229.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்பாஸ் பின் உத்பா (அறியப்படாதவர் என்ற வகையில்) பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம்வாசிகள் வழியாக அறிவிக்கும் செய்தியே ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அப்பாஸ் பின் உத்பா எந்த ஊரைச் சார்ந்தவர் என்ற விவரம் இல்லாத போது இதை முடிவு செய்யமுடியாது என்பதாலும் இந்த செய்தி பலவீனமாகும்.
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-1051 .
சமீப விமர்சனங்கள்