தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-5702

A- A+


ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

“உங்கள் ஆடைகளை மடித்து வையுங்கள். ஆடை அணிந்தவரின் உயிர் அதை நோக்கி வரும். ஒரு ஆடை, மடித்து வைக்கப்பட்டிருப்பதை ஷைத்தான் கண்டால் அதை அவன் அணியமாட்டான். மடித்து வைக்கப்படாமல் விரித்து வைக்கப்பட்டிருப்பதை அவன் கண்டால் அதை அணிந்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

 

(almujam-alawsat-5702: 5702)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ قَالَ: ثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الْوَلِيدِ الْبَجَلِيُّ قَالَ: ثَنَا يَحْيَى بْنُ كَهْمَسٍ، عَنْ عُمَرَ بْنِ مُوسَى، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اطْوُوا ثِيَابَكُمْ تَرْجِعُ إِلَيْهَا أَرْوَاحُهَا، فَإِنَّ الشَّيْطَانَ إِذَا وَجَدَ الثَّوْبَ مَطْوِيًّا لَمْ يَلْبَسْهُ، وَإِذَا وَجَدَهُ مَنْشُورًا لَبِسَهُ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ إِلَّا عُمَرُ بْنُ مُوسَى بْنِ وَجِيهٍ، وَلَا يُرْوَى عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا بِهَذَا الْإِسْنَادِ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5702.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5851.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்ஹள்ரமீ

3 . அப்துல்மலிக் பின் வலீத்

4 . யஹ்யா பின் கஹ்மஸ்

5 . உமர் பின் மூஸா பின் வஜீஹ்

6 . அபுஸ்ஸுபைர்

7 . ஜாபிர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31869-உமர் பின் மூஸா பின் வஜீஹ் என்பவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னு தாஹிர், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் அறிவிப்பாளர்தொடரையும், ஹதீஸையும் இட்டுக்கட்டுபவர் என்று கூறியுள்ளார்.
  • இவ்வாறே பல அறிஞர்கள் இவரை விடப்பட்டவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/133, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/13, லிஸானுல் மீஸான்-6/148, தஃஜீலுல் மன்ஃபஆ-2/48)


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.