(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு எப்போதாவது காய்ச்சல் வந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு; அது இரத்தத்தை வற்றச் செய்துவிடும்; உடலை மெலிய வைத்துவிடும்” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்; இவரை என்னிடமிருந்து வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(almujam-alawsat-5905: 5905)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقَزَّازُ قَالَ: ثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: ثَنَا الْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ قَالَ: ثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ،
أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى عَهْدُكَ بِأُمِّ مِلْدَمٍ؟» قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعَظْمِ، يَمَصُّ الدَّمَ، وَيَأْكُلُ اللَّحْمَ» قَالَ: مَا اشْتَكَيْتُ قَطُّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْرِجُوهُ عَنِّي»
لَمْ يَرْوِ هَذَيْنِ الْحَدِيثَيْنِ عَنْ ثَابِتٍ إِلَّا الْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ، تَفَرَّدَ بِهِ مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5905.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6054.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-12140-ஹஸன் பின் அபூஜஃபர் என்பவர் நம்பகமானவர் தான் என்றாலும் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்று அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் கூறியுள்ளார்.
- யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஸுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஸாஜீ, அபூநுஐம் ஆகியோர் இவரை முன்கருல் ஹதீஸ்-பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/386, தக்ரீபுத் தஹ்தீப்-1/235)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5905 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-8395 .
சமீப விமர்சனங்கள்