மக்களே! உங்களில் உள்ள இளைஞர்கள் பாவம் செய்தும், பெண்கள் வரம்புமீறியும் நடந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இப்படியும் நடக்குமா? என்று (ஆச்சரியமாகக்) கேட்டனர். அதற்கு, ஆம் இதை விட கடுமையான விசயமும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் நன்மையை தீமையாகவும்; தீமையை நன்மையாகவும் கருதும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-9325: 9325)حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، نَا حَرِيزُ بْنُ الْمُسْلِمِ الصَّنْعَانِيُّ، نَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ يَاسِينَ الزَّيَّاتِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كَيْفَ بِكُمْ إِذَا فَسَقَ شَبَابُكُمْ، وَطَغَى نِسَاؤُكُمْ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ذَلِكَ لَكَائِنٌ؟ قَالَ: «وَشَرٌّ مِنْ ذَلِكَ سَيَكُونُ، كَيْفَ بِكُمْ إِذَا رَأَيْتُمُ الْمَعْرُوفَ مُنْكَرًا وَالْمُنْكَرَ مَعْرُوفًا؟»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الْأَعْمَشِ إِلَّا يَاسِينُ، وَلَا عَنْ يَاسِينَ إِلَّا عَبْدُ الْمَجِيدِ، تَفَرَّدَ بِهِ حَرِيزُ بْنُ الْمُسْلِمِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-9325.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9558.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . ஹம்மாம் பின் யஹ்யா
3 . ஹரீஸ் பின் முஸ்லிம்
4 . அப்துல்மஜீத் பின் அப்துல்அஸீஸ்
5 . யாஸீன் அஸ்ஸய்யாத்
6 . அஃமஷ்
7 . அபூஸாலிஹ்
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47404-ஹம்மாம் பின் யஹ்யா என்பவரின் நிலை அறியப்படவில்லை.
- மேலும் இதில் வரும் ராவீ-47952-யாஸீன் அஸ்ஸய்யாத்-யாஸீன் பின் முஆத் என்பவர் பற்றி ஒருவரும் பாரட்டவில்லை. சிலர் இவரை முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் இட்டுக்கட்டுபவர் என்றும், சிலர் விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/312, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/533, லிஸானுல் மீஸான்-8/411)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6420.
இந்த ஹதீஸின் தரம் என்ன❓
நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையிலும் அஸர்த் தொழுகையிலும் ஸுரத்துல் ஃபாத்திஹாவுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தனர். சில நேரங்களில் (சில வசனங்களை) எங்களுக்குக் கேட்கும் படி ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதலாவது ரக்அத்தை நீளமாக்குவார்கள்.
(புகாரி: 778)
அஸ்ஸலாமு அலைக்கும்.
புகாரீ-778 சரியான செய்தி தான்.