தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10196

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் செல்வங்களை ஸகாத் (வழங்குவதன்) மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நோயாளிகளை தர்மம் செய்வதன் மூலம் குணப்படுத்துங்கள். சோதனைகளை விட்டு (பாதுகாக்கப்பட) பிரார்த்தனைகளை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10196)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو الْقَطِرَانِيُّ، ثنا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الْبَزَّازُ، ثنا مُوسَى بْنُ عُمَيْرٍ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَأَعِدُّوا لِلْبَلَاءِ الدُّعَاءَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10196.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10048.




إسناد شديد الضعف فيه موسى بن عمير القرشي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மூஸா பின் உமைர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்; அலீ அல்பஸ்ஸார் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10196 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1963 , குப்ரா பைஹகீ-6593 , …

2 . மராஸீலு அபூதாவூத்-105 ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற முர்ஸலான செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முர்ஸல் என்பதால் பலவீனமானது.

3 . இந்த கருத்தில் தப்ரானியின் அத்துஆ-34 என்ற எண்ணில் உப்பாத் பின் ஸாமித் (ரலி) வழியாக பதிவுசெய்யப்ட்டுள்ளது. இதில் வரும் முஹம்மது பின் அபூஸுர்ஆ யார் என அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமானது. (கூடுதல் தகவல் : அல்மகாஸிதுல் ஹஸனா-281)

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-5643 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.