(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுத ஒரு மனிதருக்கு, (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11658)حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ سَهْلٍ السُّكَّرِيُّ، ثنا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، ثنا عَبْدُ الْحَمِيدِ أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، ثنا النَّضْرُ أَبُو عُمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11658.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4978.
إسناد شديد الضعف فيه النضر بن عبد الرحمن الخزاز وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நள்ரு பின் அப்துர்ரஹ்மான் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்- 1 / 1002 )
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-11658 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4838 , தாரீகுல் ஜுர்ஜான்-360 , இப்னு அஸாகிர் தாரீகுதிமிஷ்க்-45407 , கஷ்ஃபுல் அஸ்தார்-491.
2 . மேற்கண்ட செய்தியுடன், முன்வரிசையில் உள்ளவரை இழுத்து தன்னுடன் நிற்கச் செய்யவேண்டும் என்று மேலதிகமாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7764 , குப்ரா பைஹகீ-5212 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-682 .
சமீப விமர்சனங்கள்