அலீ பின் ஷைபான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தூதுக்குழுவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். (பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். நபி (ஸல்) அவர்கள் தனது கடைக்கண்ணால், ருகூஃ, ஸஜ்தாவில் தனது முதுகை சரியாக நிமிர்த்தாத ஒரு மனிதரைக் கவனித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும், “முஸ்லிம்களே! ருகூஃ, ஸஜ்தாவில் தனது முதுகை சரியாக நிமிர்த்தாதவருக்கு தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.
(மற்றொரு நாள்) ஒரு மனிதர் வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அந்த மனிதர் தனது தொழுகையை முடிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் காத்திருந்தார்கள். பின்னர் அவரிடம், “உமது தொழுகையை மீண்டும் தொழுவீராக! வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுபவருக்குத் தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 16297)حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، وَسُرَيْجٌ، قَالَا: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَلِيٍّ حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ عَلِيَّ بْنَ شَيْبَانَ حَدَّثَهُ،
أَنَّهُ خَرَجَ وَافِدًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَصَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَحَ بِمُؤْخِرِ عَيْنِهِ إِلَى رَجُلٍ لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، إِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»
قَالَ: وَرَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ، فَوَقَفَ حَتَّى انْصَرَفَ الرَّجُلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقْبِلْ صَلَاتَكَ، لَا صَلَاةَ لِرَجُلٍ فَرْدٍ خَلْفَ الصَّفِّ» ، قَالَ عَبْدُ الصَّمَدِ: «فَرْدًا خَلْفَ الصَّفِّ» فَقَالَ لَهُ «اسْتَقْبِلْ صَلَاتَكَ، فَلَا صَلَاةَ لِفَرْدٍ خَلْفَ الصَّفِّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-15708.
Musnad-Ahmad-Shamila-16297.
Musnad-Ahmad-Alamiah-15708.
Musnad-Ahmad-JawamiulKalim-15957.
இந்தச் செய்தியின் 2 அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
2 . அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ்-அத்தமீமி, 3 . ஸுரைஜ் பின் நுஃமான்.
4 . முலாஸிம் பின் அம்ர்
5 . அப்துல்லாஹ் பின் பத்ர்
6 . அப்துர்ரஹ்மான் பின் அலீ பின் ஷைபான்
7 . அலீ பின் ஷைபான் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22081-அப்துர்ரஹ்மான் பின் அலீ பின் ஷைபான் அவர்களை இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபுல்அரப், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு ஹஸ்ம்,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
பார்க்க: ராவிபெயர்-அப்துர்ரஹ்மான் பின் அலீ பின் ஷைபான்.
இந்தச் செய்தியின் படி ருகூஃ, ஸஜ்தாவில் முதுகை சரியாக வைப்பதும், தொழுகையின் முன்வரிசையில் இடமிருந்தால் அந்த வரிசையில் நிற்பதும் அவசியம் என்று சிலர் கூறியுள்ளனர்.
வேறு சிலர் இதை அவசியம் என்று எடுக்காமல் சிறந்தது, நல்லது என்று கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அலீ பின் ஷைபான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தபகாத்துல் குப்ரா-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2957, 5888, 36081, அஹ்மத்-16297, 16284, இப்னு மாஜா-871, 1003, அல்மஃரிஃபது வத்தாரீக்-, இப்னு குஸைமா-593, 667, 872, 1569, 1570, இப்னு ஹிப்பான்-1891, 2202, 2203, குப்ரா பைஹகீ-5213, …
2 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் அபூமஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: நஸாயீ-1027.
3 . இந்த செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்தில் வாபிஸா பின் மஅபத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-230.
4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11658.
5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5323.
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-20405, புகாரி-380, 722,
தொழுகையில் திருடுதல்.
பார்க்க: அஹ்மத்-22642,
ஆய்வுக்காக:
1 . கொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா?.
2 . ஜமாஅத் தொழுகையில் இடைவெளி – எதிர்க்கருத்துக்கு மறுப்பு.
சமீப விமர்சனங்கள்