தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-333

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களிடமிருந்து ஸல்மான் அல்அஃகர் அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவனின் உரிமையை சரியாக அறிந்திருந்தால், அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை உட்கார மாட்டாள். (நின்றுக் கொண்டே இருப்பாள்).

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 333)

سُلَيْمَانُ الْأَغَرُّ، عَنْ مُعَاذٍ

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، ثنا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ النُّمَيْرِيُّ، ثنا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عُبَيْدِ بْنِ سُلَيْمَانَ الْأَغَرِّ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَوْ تَعْلَمُ الْمَرْأَةُ حَقَّ الزَّوْجِ مَا قَعَدَتْ مَا حَضَرَ غَدَاؤُهُ وَعَشَاؤُهُ حَتَّى يَفْرُغَ مِنْهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-333.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16777.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்

3 . முஹம்மத் பின் அபூபக்ர்

4 . ஃபுளைல் பின் ஸுலைமான் அன்னுமைரீ

5 . மூஸா பின் உக்பா

6 . உபைத் பின் ஸல்மான் அல்அஃகர்-உபைதுல்லாஹ் பின் ஸல்மான்

7 . ஸல்மான் அல்அஃகர்

8 . முஆத் பின் ஜபல் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஃபுளைல் பின் ஸுலைமான் அன்னுமைரீ அதிகம் தவறிழைப்பவர் என்ற விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் 7 வது வரிசையில் இருக்கும் அறிவிப்பாளரின் பெயரை தப்ரானீ அவர்கள் ஸுலைமான் அல்அஃகர் என்று கூறியுள்ளார். இதை இவ்வாறு அறிவித்தது ஃபுளைல் பின் ஸுலைமான் என்பவராக இருக்கலாம். அல்லது வேறு காரணம் இருக்கலாம்.

الفرائد على مجمع الزوائد «ترجمة الرواة الذين لم يعرفهم الحافظ الهيثمي» (ص: 169)
346 – عبيد بن سليمان الأغر قال: لم أعرفه.
قلت: هو عبيد بن سلمان -ويقال: سليمان- الأغر، مولى مسلم بن هلال القرشي. قال البخاري: لا يصح حديثه.

இவரின் மகன் பெயர் உபைத் பின் ஸல்மான் அல்அஃகர் என்பதாகும். இவரின் தந்தைக்கு ஸுலைமான் அல்அஃகர் என்று கூறப்படும். இவர் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹிலால் அவர்களின் அடிமை. இவரின் ஹதீஸ் சரியானதல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார் என்ற தகவலை “அல்ஃபராஇத் அலா மஜ்மஇஸ் ஸவாஇத்” எனும் நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்ஃபராஇத் அலா மஜ்மஇஸ் ஸவாஇத்-346)


மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2665.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.