தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-4085

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்து அபுஷ்ஷிமால் பின் ளிபாப் என்பவர் அறிவிக்கும் செய்திகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வெட்கம்.

2 . வாசனை திரவியம் பூசுவது.

3 . திருமணம் செய்வது.

4 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது).

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4085)

أَبُو الشِّمَالِ بْنُ ضِبَابٍ، عَنْ أَبِي أَيُّوبَ

حَدَّثَنَا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، ح وَحَدَّثَنَا أَبُو خَلِيفَةَ، ثنا أَبُو ظُفُرَ عَبْدُ السَّلَامِ بْنِ مُطَهَّرٍ، قَالَا: ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ، ح وَحَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الرَّقِّيُّ، ثنا مُحَمَّدُ بْنُ سِنَانَ الْعَوَقِيُّ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ الْجَوْهَرِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَا: ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَأَةَ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ بْنِ ضِبَابٍ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: الْحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4085.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3977.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபுஷ்ஷிமால் பின் ளிபாப் என்பவர் பற்றி எனக்கு தெரியாது என்றும், இந்த ஒரு செய்தியில் மட்டுமே இவர் இடம்பெறுகிறார் என்றும் அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார். இமாம் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
  • இவரிடமிருந்து மக்ஹூல் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதாலும், இவரைப்பற்றி ஏற்கத்தக்க நற்சான்று இல்லை என்பதாலும் இவர் அறியப்படாதவர் ஆவார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/390, அல்காஷிஃப்-5/60, தக்ரீபுத் தஹ்தீப்-1/1159)

மேலும் பார்க்க: திர்மிதீ-1080 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.