தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-8067

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஒரு சமுதாயம் நேர்வழியில் இருந்த பிறகு அதிலிருந்து வழி தவறுவதற்கு, விதண்டாவாதம் செய்வது தவிர வேறெதுவும் (அவர்களுக்கு) கொடுக்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,

“எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று அவர்கள் கேட்கின்றனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!” (அல்குர்ஆன்: 43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8067)

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ غَنَّامٍ ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ خُلَيْدٍ الْحَلَبِيُّ، ثنا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، ثنا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، ح وَحَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، ثنا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، ثنا عِيسَى بْنُ يُونُسَ، كُلُّهُمْ عَنِ الْحَجَّاجِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا جَدَلًا» ، ثُمَّ قَرَأَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8067.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7988.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • இதன் அறிவிப்பாளர்தொடரில், ஹஜ்ஜாஜ் பின் தீனார் அவர்களுக்கும் அபூஉமாமா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முன்கதிஃ ஆகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-3253.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.