853-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து மதிப்பும், மாண்பும் மிக்க அல்லாஹ் வியப்படைகிறான்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2/)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ خَالِدِ بْنِ حَيَّانَ الرَّقِّيُّ، ثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبَّادٍ الْعَبَّادَانِيُّ، ح، وَحَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَا: ثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي عُشَّانَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَعْجَبُ مِنَ الشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-853-2.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-14285.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யஹ்யா, 3 . ஜஃபர் பின் முஹம்மத்
4 . அப்துல்லாஹ் பின் அப்பாத், 5 . குதைபா பின் ஸயீத்
6 . இப்னு லஹீஆ
7 . ஹய்யு பின் யுஃமின்-அபூஉஷ்ஷானா
8 . உக்பா பின் ஆமிர் (ரலி)
இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-24801-அப்துல்லாஹ் பின் அப்பாத் யாரென அறியப்படாதவர்; இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-6534-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யஹ்யா என்பவரின் நிலை அறியப்படவில்லை என்பதால் இவர்கள் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.
மேலும் பார்க்க: அஹ்மத்-17371.
சமீப விமர்சனங்கள்