அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17371)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي عُشَّانَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ لَيَعْجَبُ مِنَ الشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17371.
Musnad-Ahmad-Alamiah-16731.
Musnad-Ahmad-JawamiulKalim-17041.
ஹதீஸின் கருத்து:
அல்லாஹ் வியப்படைகிறான் என்பதும் அல்லாஹ்வுக்கு உள்ள பண்பாகும். இதன் பொருள், தனக்கு கட்டுப்படும் அடியார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு நற்கூலி வழங்குவான் என்று ஹதீஸ்துறை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . குதைபா பின் ஸயீத்
3 . இப்னு லஹீஆ
4 . ஹய்யு பின் யுஃமின்-அபூஉஷ்ஷானா
5 . உக்பா பின் ஆமிர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ எகிப்தைச் சேர்ந்தவர். இவர் எகிப்தின் நீதிபதியாக இருந்துள்ளார். மேலும் ஹதீஸ்களை அறிவிப்பவராகவும் இருந்துள்ளார்.
1 . இவரைப்பற்றி சிலர் எல்லா நிலையிலும் இவர் பலமானவர் என்றும்,
2 . சிலர் எல்லா நிலையிலும் இவர் பலவீனமானவர் என்றும்,
3 . சிலர், சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் கூறியுள்ளனர்.
(இவரைப் பற்றி விரிவான தகவல் பார்க்க: இப்னு லஹீஆ)
குதைபா பின் ஸயீத் அவர்கள் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார்.
(நூல்கள்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512, தஹ்தீபுல் கமால்-15/494)
இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.
(நூல்: முஸ்னத் ரூயானீ-227)
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இந்தச் செய்தியை மவ்கூஃப்-நபித்தோழரின் சொல் என்று கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1843)
இதற்கான காரணம் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்கள் தனது ஸுஹ்த் எனும் நூலில் இந்தச் செய்தியை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சொல்லாக பதிவு செய்துள்ளார். என்றாலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15783-ரிஷ்தீன் பின் ஸஃத் பலவீனமானவர் ஆவார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2320, அல்காமிஃலு ஃபிள்ளுஅஃபா-669, தஹ்தீபுத் தஹ்தீப்-3/278)
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், ஆரம்பத்தில் இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார்.
(நூல்: ளிலாலுல் ஜன்னா-571, ளயீஃப் ஜாமிஉஸ் ஸஃகீர்-3581, 1658)
பிறகு இப்னு லஹீஆவை பற்றிய ஆய்வின் அடிப்படையில் இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து இப்னு வஹ்ப், குதைபா பின் ஸயீத் ஆகியோர் அறிவித்திருப்பதால் இதை சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: ஸஹீஹா-2843)
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் பலவீனம் என்று கூறிய கருத்தை வாபஸ் வாங்கிவிட்டார்.
(https://www.youtube.com/watch?v=WDjnSeXH6n4)
இந்தச் செய்தியை இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து இப்னு வஹ்ப், குதைபா பின் ஸயீத், ஸயீத் பின் ஷுரஹ்பீல், ஹிஷாம் பின் அம்மார், காமில் பின் தல்ஹா, ஸைத் பின் அபுஸ்ஸர்காஃ, ஸயீத் பின் அபூமர்யம், யஹ்யா பின் யஹ்யா நைஸாபூரீ ஆகியோர் அறிவித்துள்ளனர். இவர்களின் அறிவிப்பாளர்தொடர் நூலாசிரியரிடமிருந்து இவர்கள் வரை சரியான அறிவிப்பாளர்தொடரில் உள்ளது.
1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு லஹீஆ —> அபூஉஷ்ஷானா —> உக்பா பின் ஆமிர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-17371, முஸ்னத் ஹாரிஸ்-1099, அஸ்ஸுன்னா-இப்னு அபூஆஸிம்-571, முஸ்னத் அபீ யஃலா-1749, முஸ்னத் ரூயானீ-227, இஃதிலாலுல் குலூப்-537, முஃஜம் இப்னுல் அஃராபீ-887, அல்முஃஜமுல் கபீர்-853-2, அத்தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-231, ஃபவாஇத் தம்மாம்-1300, முஸ்னத் ஷிஹாப்-576, அல்அஸ்மாஉ வஸ்ஸிஃபாத்-பைஹகீ-993, ….
- முஸ்னத் ரூயானீ-227.
مسند الروياني (1/ 175)
227 – نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، نا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي عُشَّانَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إنَّ رَبَّكَ لَيَعْجَبُ لِلشَّابِّ لَا صَبْوَةَ لَهُ»
…
- இப்னு லஹீஆ —> மிஷ்ரஹ் பின் ஹாஆன் —> உக்பா பின் ஆமிர் (ரலி)
பார்க்க: முஸ்னத் ரூயானீ-222,
مسند الروياني (1/ 174)
222 – وَأَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إنَّ رَبَّكَ لَيَعْجَبُ لِلشَّابِ لَا صَبْوَةَ لَهُ»
இதன் அறிவிப்பாளர்தொடர்
مسند الروياني (1/ 172)
218 – نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، نا عَمِّي، حَدَّثَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: …
1 . முஹம்மத் பின் ஹாரூன் ரூயானீ
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துர்ரஹ்மான்
3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்
4 . இப்னு லஹீஆ
5 . மிஷ்ரஹ் பின் ஹாஆன்
6 . உக்பா பின் ஆமிர் (ரலி)
இந்தச் செய்தியை இப்னு வஹ்பிடமிருந்து அவரின் சகோதரரின் மகன் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துர்ரஹ்மான் என்பவர் இரு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
1 . இப்னு லஹீஆ —> அபூஉஷ்ஷானா —> உக்பா பின் ஆமிர் (ரலி)
2 . இப்னு லஹீஆ —> மிஷ்ரஹ் பின் ஹாஆன் —> உக்பா பின் ஆமிர் (ரலி)
அபூஉஷ்ஷானா பலமானவர் ஆவார். மிஷ்ரஹ் பின் ஹாஆன் ஹஸன் தரத்தில் உள்ளவர் ஆவார்.
- ரிஷ்தீன் பின் ஸஃத் —> அம்ர் பின் ஹாரிஸ் —> அபூஉஷ்ஷானா —> உக்பா பின் ஆமிர் (ரலி)
பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல்முபாரக்-349.
الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (1/ 118)
349 – أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ، وَأَبُو بَكْرٍ الْوَرَّاقُ قَالَا: أَخْبَرَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عُشَّانَةَ الْمَعَافِرِيِّ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ: «يَعْجَبُ رَبُّكَ تَعَالَى لِلشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15783-ரிஷ்தீன் பின் ஸஃத் பலவீனமானவர் ஆவார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2320, அல்காமிஃலு ஃபிள்ளு அஃபா-669, தஹ்தீபுத் தஹ்தீப்-3/278)
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-660,
சமீப விமர்சனங்கள்