Author: Farook

Bukhari-7505

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7505. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :97


أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي


Bukhari-7504

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7504. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைச் சந்திக்க விரும்பினால் நானும் அவனைச் சந்திக்க விரும்புகிறேன். அவன் என்னைச் சந்திப்பதை வெறுத்தால் நானும் அவனைச் சந்திப்பதை வெறுக்கிறேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :97


إِذَا أَحَبَّ عَبْدِي لِقَائِي أَحْبَبْتُ لِقَاءَهُ، وَإِذَا كَرِهَ لِقَائِي كَرِهْتُ لِقَاءَهُ


Bukhari-7503

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7503. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (ஒரு நாள்) மழைபொழிந்தது. அப்போது அவர்கள், ‘என் அடியார்களில் என்னை நிராகரிப்பவனும் இருக்கிறான்; என்னை நம்புகிறவனும் இருக்கிறான் என்று அல்லாஹ் கூறினான்’ என்றார்கள்.

Book :97


مُطِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” قَالَ اللَّهُ: أَصْبَحَ مِنْ عِبَادِي كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِي


Bukhari-7502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7502. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் ‘சற்று பொறு’ என்றான். ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்றது உறவு. ‘இது உனக்காக நடக்கும்’ என்றான் அல்லாஹ்.

(இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்.

Book :97


خَلَقَ اللَّهُ الخَلْقَ، فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ، فَقَالَ: مَهْ، قَالَتْ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، فَقَالَ: أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ، قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَذَلِكِ لَكِ “، ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} [محمد: 22]


Bukhari-7501

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7501. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :97


إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً، فَلاَ تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا، وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا  فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ


Bukhari-7500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7500. ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசியபோது, ஆயிஷா(ரலி) அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்கள் சொன்ன அவதூறிலிருந்து அவர்களை அல்லாஹ் விடுவித்துவிட்டான். இச்செய்தி குறித்து நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு அபீ வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோரிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.

…ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிக்க, ஓதப்படுகிற வேத அறிவிப்பை அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஓதப்படுகிற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உறக்கத்தில் காண்பார்கள்

حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِمَّا قَالُوا، وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ الَّذِي حَدَّثَنِي، عَنْ عَائِشَةَ قَالَتْ: «وَلَكِنِّي وَاللَّهِ مَا كُنْتُ أَظُنُّ أَنَّ اللَّهَ يُنْزِلُ فِي بَرَاءَتِي وَحْيًا يُتْلَى، وَلَشَأْنِي فِي نَفْسِي كَانَ أَحْقَرَ مِنْ أَنْ يَتَكَلَّمَ اللَّهُ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَلَكِنِّي كُنْتُ أَرْجُو أَنْ يَرَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ رُؤْيَا يُبَرِّئُنِي اللَّهُ بِهَا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى»: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} العَشْرَ الآيَاتِ


Bukhari-7499

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7499. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ்ஜுத் தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள். பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்! நீயே உண்மை. உன் வாக்குறுதியே உண்மை. உன் சொல்லே சத்தியம். உன் சந்திப்பே உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் அனுப்பப்பட்டதும்) உண்மை. மறுமை நாள் (நிகழப்போவது) உண்மை. இறைவா! உனக்கே கீழ்ப்படிந்தேன். உன்னையே நம்பினேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் பக்கமே திரும்புகிறேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடம் நீதி கேட்டேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே என் இறைவன் வணக்கத்திற்குரியவர் உன்னைத் தவிர வேறெவருமில்லை.141

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَهَجَّدَ مِنَ اللَّيْلِ، قَالَ: «اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الحَقُّ، وَوَعْدُكَ الحَقُّ، وَقَوْلُكَ الحَقُّ، وَلِقَاؤُكَ الحَقُّ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ»


Bukhari-7498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7498. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்’ என்று அல்லாஹ் கூறினான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.140

Book :97


أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ


Bukhari-7497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7497. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள்) ‘இதோ கதீஜா உங்களிடம் ‘உணவுப் பத்திரத்தை’ அல்லது ‘பானமுள்ள பாத்திரத்தை’ கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவரின் இறைவனிடமிருந்து சலாம் எடுத்துரையுங்கள். கூச்சலோ களைப்போ இல்லாத முத்து மாளிகையொன்று அவருக்கு (சொர்க்கத்தில்) கிடைக்கும் என்று நற்செய்தி அளியுங்கள்’ என்றார்கள்.139

Book :97


«هَذِهِ خَدِيجَةُ أَتَتْكَ بِإِنَاءٍ فِيهِ طَعَامٌ – أَوْ إِنَاءٍ فِيهِ شَرَابٌ – فَأَقْرِئْهَا مِنْ رَبِّهَا السَّلاَمَ، وَبَشِّرْهَا بِبَيْتٍ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ، وَلاَ نَصَبَ»


Bukhari-7496

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7496. இதே அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:

‘(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவுசெய்வேன்’ என அல்லாஹ் கூறினான்.

Book :97


أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ


Next Page » « Previous Page