Author: Farook

Bukhari-7495

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமைநாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.138

Book :97


«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-7494

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7494. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது கீழ்வானிற்கு இறங்கி வந்து, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.137

Book :97


يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ


Bukhari-7493

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7493. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இறைத் தூதர்) அய்யூப்(அலை) அவர்கள் திறந்த மேனியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்களின் மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தங்களின் ஆடையில் அள்ளத் தொடங்கினார்கள். அப்போது அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து, ‘அய்யூப்! நீங்கள் பார்க்கிற இந்தத் தங்கக்கால் உங்களுக்குத் தேவைப்படாத அளவிற்கு உங்களை நான் செல்வராக ஆக்கியிருக்கவில்லையா?’ என்று கேட்க, அவர்கள் ‘ஆம். என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!’ என்று பதிலளித்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.136

Book :97


بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ رِجْلُ جَرَادٍ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ، فَنَادَى رَبُّهُ: يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى؟ قَالَ: بَلَى، يَا رَبِّ، وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ


Bukhari-7492

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7492. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவேவிட்டுவிடுகிறார்’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்புத் துறக்கம் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.

என அபூ ஹுரைரரா(ரலி) அறிவித்தார்.135

Book :97


الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِي، وَالصَّوْمُ جُنَّةٌ، وَلِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ حِينَ يُفْطِرُ، وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ


Bukhari-7491

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள் (48:15). நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)

7491. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்’ என்று அல்லாஹ் கூறினான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.134

Book : 97


يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ:، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ، أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ


Bukhari-7490

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7490. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஓ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் ‘நீங்கள் உங்கள் தொழுகையிலும் இணைவைப்பாளர்களின் காதில் விழும் அளவிற்குக் குரலை உயர்த்தாதீர்கள். அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தியும் விடாதீர்கள். அவர்களுக்குக் கேட்டால் தான் உங்களிடமிருந்து அவர்கள் குர்ஆனைக் கற்பார்கள். எனவே, இவ்விரண்டிற்கும் இடையே மிதமான போக்கைக் கையாளுங்கள்’ எனக் கட்டளையிட்டான்.

{وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ} [الإسراء: 110] بِهَا، قَالَ: «أُنْزِلَتْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَارٍ بِمَكَّةَ، فَكَانَ إِذَا رَفَعَ صَوْتَهُ سَمِعَ المُشْرِكُونَ، فَسَبُّوا القُرْآنَ وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللَّهُ تَعَالَى»: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]: «لَا تَجْهَرْ بِصَلَاتِكَ حَتَّى يَسْمَعَ المُشْرِكُونَ»، {وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] «عَنْ أَصْحَابِكَ فَلَا تُسْمِعُهُمْ»، {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110] «أَسْمِعْهُمْ وَلَا تَجْهَرْ، حَتَّى يَأْخُذُوا عَنْكَ القُرْآنَ»


Bukhari-7489

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7489. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

(அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டு வந்த அகழ்ப் போரான) ‘அஹ்ஸாப்’ போர் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் குலங்களைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.132

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :97


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الأَحْزَابِ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، سَرِيعَ الحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، وَزَلْزِلْ بِهِمْ»


Bukhari-7488

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34

ஆனால், (நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அருளியவற்றைத் தன் பேரறிவைக் கொண்டே அருளினான் என்பதற்குத் தானே சான்று வழங்குகின்றான். வானவர்களும் சாட்சி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள் எனும் (4:166 ஆவது) இறைவசனம்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவற்றிற்கிடையே (இறைவனின்) கட்டளை இறங்கிக் கொண்டிருக்கின்றது (65:12). அதாவது ஏழாவது வானத்திற்கும் ஏழாவது பூமிக்கும் இடையே.

7488. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ‘இன்னாரே! நீங்கள் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘இறைவா! நான் என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் முகத்தை உன்னிடமே திருப்பினேன். என் காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்.) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன் வேதத்தையும் நீ அனுப்பி வைத்த உன் தூதரையும் நான்

يَا فُلاَنُ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنَّكَ إِنْ مُتَّ فِي لَيْلَتِكَ مُتَّ عَلَى الفِطْرَةِ، وَإِنْ أَصْبَحْتَ أَصَبْتَ أَجْرًا


Bukhari-7487

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7487. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்துவிட்டவர் சொர்க்கம் செல்வார் எனும் நற்செய்தியைத் தெரிவித்தார். ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று நான் கேட்க, ஜிப்ரீல் ‘ஆம். அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே’ என்று பதிலளித்தார்கள்.

என அபூ தர்(ரலி) அறிவித்தார். 130

Book :97


أَتَانِي جِبْرِيلُ فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ، قُلْتُ: وَإِنْ سَرَقَ، وَإِنْ زَنَى، قَالَ: وَإِنْ سَرَقَ، وَإِنْ زَنَى


Bukhari-7486

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டுவிட்டு வந்தீர்கள்,’ என்று அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே – கேட்பான். அதற்கு வானவர்கள், ‘அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களைவிட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்’ என்று பதிலளிப்பார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129

Book :97


يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ العَصْرِ وَصَلاَةِ الفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ


Next Page » « Previous Page