Author: Farook

Bukhari-7485

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 33

இறைவன் (வானவர்) ஜிப்ரீல் அவர்களுடன் பேசுவதும் அவன் வானவர்களை அழைப்பதும்.

மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(நபியே!) விவேகமும் ஞானமும் மிக்க (இறை)வனிடமிருந்து இந்தக் குர்ஆன் உமக்கு அருளப்பெறுகிறது எனும் (27:6ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள துலக்கா’ எனும் சொல்லுக்குப் போடப்படுகிறது’ என்று பொருள். இதைப் போன்றே, ஆதம் தம்முடைய இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார் எனும் (2:37ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள தலக்கா’ எனும் சொல்லுக்கு அடைந்தார்’ என்று பொருள்.

7485. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ்

إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا أَحَبَّ عَبْدًا نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلاَنًا فَأَحِبَّهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي جِبْرِيلُ فِي السَّمَاءِ: إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، وَيُوضَعُ لَهُ القَبُولُ فِي أَهْلِ الأَرْضِ


Bukhari-7484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7484. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போன்று வேறெந்தப் பெண் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. நபி(ஸல்) அவர்களின் இறைவன் கதீஜா அவர்களுக்கு சொர்க்கத்தில் (முத்து) மாளிகை ஒன்று இருப்பதாக நற்செய்தி அறிவிக்கச் சொன்னான்.

இதை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.127

Book :97


«مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ ، وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الجَنَّةِ»


Bukhari-7483

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7483. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ், (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), ‘ஆதமே!’ என்று அழைப்பான். ஆதம்(அலை) அவர்கள், ‘இதோ வந்துவிட்டேன்; கட்டளையிடு! காத்திருக்கிறேன்’ என்று சொல்வார்கள். அப்போது உரத்த குரலில் ‘உங்கள் சந்ததியினரிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்ட இருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என அறிவிக்கப்படும்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.126

Book :97


يَا آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، فَيُنَادَى بِصَوْتٍ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُخْرِجَ مِنْ ذُرِّيَّتِكَ بَعْثًا إِلَى النَّارِ


Bukhari-7482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ், தன் தூதர் இனியகுரலில் குர்ஆனை ஓதும்போது அதை செவிகொடுத்துக் கேட்பதைப் போன்று வேறு எதையும் அவன் செவிமடுத்துக் கேட்டதில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் தோழர் ஒருவர் ‘இது குரலெடுத்து (இனிமையாகக்) குர்ஆன் ஓதுவதைக் குறிக்கின்றது’ என்கிறார்.125

Book :97


«مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَغَنَّى بِالقُرْآنِ»، وَقَالَ صَاحِبٌ لَهُ: يُرِيدُ: أَنْ يَجْهَرَ بِهِ


Bukhari-7481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 32

அவன் அனுமதியளித்தவர்களுக்குத் தவிர வேறெவருக்காகவும் அவனிடம் பரிந்துரை செய்வது பயனளிக்காது. (தீர்ப்பு நாளன்று) மக்களுடைய உள்ளங்களில் இருந்து அச்சம் அகற்றப்பட்டுவிடும் போது (பரிந்துரைப் பவர்களிடம்), உங்கள் இறைவன் என்ன பதிலுரைத்தான்?’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு சரியான பதிலுரைத் துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கின்றான்’என்று கூறுவார்கள் எனும் (34:23ஆவது) இறை வசனம்.

உங்கள் இறைவன் என்ன படைத்தான் என்று (அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் சொல்லவில்லை. மேலும், புகழுக்குரிய அல்லாஹ் கூறகின்றான்: அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைப்பவர் யார்? (2:255)

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் வஹீயின் மூலம் பேசும் போது வானவர்கள் (அதில்) சிறிது கேட்டு (அதிர்ச்சியாகி)விடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் நீக்கப்பட்டு குரல் ஓய்ந்துவிடும் போது, இது (தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள) சத்திய வாக்கு என்று புரிந்துகொள்வார்கள். மேலும், உங்கள் இறைவன் என்ன

إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ، ضَرَبَتِ المَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ، كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ قَالَ – عَلِيٌّ: وَقَالَ غَيْرُهُ: صَفْوَانٍ يَنْفُذُهُمْ ذَلِكَ – فَإِذَا “: {فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الحَقَّ وَهُوَ العَلِيُّ الكَبِيرُ} [سبأ: 23]، قَالَ عَلِيٌّ، وَحَدَّثَنَا سُفْيَانُ: حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِهَذَا، قَالَ سُفْيَانُ: قَالَ عَمْرٌو: سَمِعْتُ عِكْرِمَةَ: حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ عَلِيٌّ: قُلْتُ لِسُفْيَانَ: قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ لِسُفْيَانَ: إِنَّ إِنْسَانًا رَوَى عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَرْفَعُهُ: أَنَّهُ قَرَأَ: (فُرِّغَ)، قَالَ سُفْيَانُ: هَكَذَا قَرَأَ عَمْرٌو، فَلاَ أَدْرِي سَمِعَهُ هَكَذَا أَمْ لاَ؟ قَالَ سُفْيَانُ: وَهِيَ قِرَاءَتُنَا


Bukhari-7480

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7480. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால் அதை அவர்கள் வெற்றிகொள்ளவில்லை. அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றுவிடுவோம்’ என்றார்கள். முஸ்லிம்கள், ‘நாம் (கோட்டையை) வெற்றிக்கொள்ளாமலேயே திரும்பிச் செல்வதா?’ என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் (உங்கள் விருப்பம்). முற்பகலிலேயே போருக்குச் செல்லுங்கள்’ என்றார்கள். மக்களும் அவ்வாறே போருக்குச் செல்ல அவர்களுக்குக் காயங்கள் பல ஏற்பட்டன. நபி(ஸல்) அவர்களை (அச்சமயம்) ‘அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்’ என்றார்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியது போன்றிருந்தது. உடனே நபி(ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்.122

Book :97


حَاصَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْلَ الطَّائِفِ فَلَمْ يَفْتَحْهَا، فَقَالَ: «إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ»، فَقَالَ المُسْلِمُونَ: نَقْفُلُ وَلَمْ نَفْتَحْ، قَالَ: «فَاغْدُوا عَلَى القِتَالِ»، فَغَدَوْا فَأَصَابَتْهُمْ جِرَاحَاتٌ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ»، فَكَأَنَّ ذَلِكَ أَعْجَبَهُمْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7479. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்ல (திட்டமிட்டபோது) ‘அல்லாஹ் நாடினால் நாளை நாம் பனூ கினானா பள்ளத்தாக்கின் அருகே தங்குவோம். அந்த இடத்தில் தான் குறைஷியர் ‘நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தார்கள்’ என்று முஹஸ்ஸப் பள்ளத்தாக்கைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்.121

Book :97


«نَنْزِلُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الكُفْرِ يُرِيدُ المُحَصَّبَ»


Bukhari-7478

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7478. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘மூஸா(அலை) (அவர்கள் கல்வி கற்பதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களின் அந்தத் தோழர் யார்? அவர் ‘களிர்’ அவர்கள் தாமா?’ என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் ஹுர்ரு இப்னு கைஸ் அல் ஃபஸாரிய்யு என்பாரும் கருத்து வேறுபட்டு தர்க்கித்துக் கொண்டார்கள். அப்போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை இப்னு அப்பாஸ்(ருலி) அவர்கள் அழைத்து, ‘நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) அவர்கள் எவரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாகத் தர்க்கித்துக் கொண்டோம். அவரின் நிலைக் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள். உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்.

ஆம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டத்தாரிடையே மூஸா(அலை) அவர்கள் இருந்தபோது ஒருவர் வந்து ‘உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது

أَنَّهُ تَمَارَى هُوَ وَالحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى أَهُوَ خَضِرٌ؟ فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ، فَقَالَ: إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ، قَالَ: نَعَمْ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” بَيْنَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ فَقَالَ مُوسَى: لاَ، فَأُوحِيَ إِلَى مُوسَى، بَلَى عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الحُوتَ فَارْجِعْ فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ مُوسَى يَتْبَعُ أَثَرَ الحُوتِ فِي البَحْرِ، فَقَالَ فَتَى مُوسَى لِمُوسَى: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، قَالَ مُوسَى: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا)، فَوَجَدَا خَضِرًا، وَكَانَ مِنْ شَأْنِهِمَا مَا قَصَّ اللَّهُ


Bukhari-7477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7477. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!’ என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேளுங்கள். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்படுத்துபவர் எவருமில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.119

Book :97


لاَ يَقُلْ أَحَدُكُمْ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ، ارْحَمْنِي إِنْ شِئْتَ، ارْزُقْنِي إِنْ شِئْتَ، وَليَعْزِمْ مَسْأَلَتَهُ، إِنَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ، لاَ مُكْرِهَ لَهُ


Bukhari-7476

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7476. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் ‘யாசகம் கேட்பவர்’ அல்லது ‘தேவையுடையவர்’ யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி,) ‘(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்றுகிறான்’ என்று கூறுவார்கள். 118

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ السَّائِلُ – وَرُبَّمَا قَالَ جَاءَهُ السَّائِلُ – أَوْ صَاحِبُ الحَاجَةِ، قَالَ: «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ»


Next Page » « Previous Page