7435. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நீங்கள் உங்களுடைய இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :97
«إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا»
7435. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நீங்கள் உங்களுடைய இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :97
«إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا»
பாடம் : 24 அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக் கொண்டிருக்கும் எனும் (75:22, 23 ஆகிய) வசனங்கள்.74
7434. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (அந்த) பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் (உங்களுடைய இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)’ என்றார்கள்.75
Book : 97
كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ نَظَرَ إِلَى القَمَرِ لَيْلَةَ البَدْرِ قَالَ: «إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا القَمَرَ، لاَ تُضَامُونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَصَلاَةٍ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ، فَافْعَلُوا»
7433. அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது’ எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது’ என்றார்கள்.73
Book :97
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ: {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا} [يس: 38]، قَالَ: «مُسْتَقَرُّهَا تَحْتَ العَرْشِ»
7432. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரஉ இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல்ஃபஸாரீ(ரலி), அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரீ அல்கிலாபீ(ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மைவிட்டுவிடுகிறார்களே’ என்று கூறினார்கள்.
(இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘(புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்’ என்றார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் முன்வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ என்று சொன்னான். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் بَعَثَ عَلِيٌّ وَهُوَ بِاليَمَنِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذُهَيْبَةٍ فِي تُرْبَتِهَا، فَقَسَمَهَا بَيْنَ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الحَنْظَلِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي مُجَاشِعٍ، وَبَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ الفَزَارِيِّ وَبَيْنَ عَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ العَامِرِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ وَبَيْنَ زَيْدِ الخَيْلِ الطَّائِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، فَتَغَيَّظَتْ قُرَيْشٌ وَالأَنْصَارُ فَقَالُوا: يُعْطِيهِ صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ، وَيَدَعُنَا قَالَ: «إِنَّمَا أَتَأَلَّفُهُمْ»، فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ العَيْنَيْنِ، نَاتِئُ الجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ، مُشْرِفُ الوَجْنَتَيْنِ، مَحْلُوقُ الرَّأْسِ، فَقَالَ: يَا مُحَمَّدُ، اتَّقِ اللَّهَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ يُطِيعُ اللَّهَ إِذَا عَصَيْتُهُ، فَيَأْمَنُنِي عَلَى أَهْلِ الأَرْضِ، وَلاَ تَأْمَنُونِي»، فَسَأَلَ رَجُلٌ مِنَ القَوْمِ قَتْلَهُ، أُرَاهُ خَالِدَ بْنَ الوَلِيدِ، فَمَنَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا وَلَّى، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا، قَوْمًا يَقْرَءُونَ القُرْآنَ، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ، وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ»
7431. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது இச்சொற்களைக் கூறிப் பிரார்த்தித்துவந்தார்கள்: லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ஷில் கரீம். (மகத்துவமிக்கோனும் பொறுமை மிகுந்தோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; வானங்களின் அதிபதியும் சிறப்புமிக்க அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.)71
Book :97
أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَدْعُو بِهِنَّ عِنْدَ الكَرْبِ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ [ص:127] وَرَبُّ العَرْشِ الكَرِيمِ
7430. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.70
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :97
«مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَصْعَدُ إِلَى اللَّهِ إِلَّا الطَّيِّبُ، فَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فُلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ» وَرَوَاهُ وَرْقَاءُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلاَ يَصْعَدُ إِلَى اللَّهِ إِلَّا الطَّيِّبُ»
பாடம் : 23 வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றார்கள் எனும் (70:4ஆவது) இறைவசனம். புகழ்மிகுந்த அல்லாஹ் கூறுகின்றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச் செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா! என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத் திற்கு) உயர்த்துகின்றது. துல் மஆரிஜ்’ (ஏணிப் படிகளைக் கொண்டவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச் செல்கின்றனர்.68
7429. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இரவில் சில வானவர்களும், பலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் يَتَعَاقَبُونَ فِيكُمْ: مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ العَصْرِ وَصَلاَةِ الفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِكُمْ، فَيَقُولُ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ
7428. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அப்போது நானே முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்டவனாக இருப்பேன். அப்போது மூஸா(இறை) அரியாசனத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.66
Book :97
«فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، فَإِذَا مُوسَى آخِذٌ بِالعَرْشِ»
7427. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மறுமை நாளில் மக்கள் மயக்கமடைந்து விடுவார்கள். அப்போது (நான் முதலாவதாக மூர்ச்சை தெளிந்து எழும்போது) மூஸாவின் அருகில் இருப்பேன். அவர்(இறை) அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.65
Book :97
«النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ»
7426. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அரீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ளி, வ ரப்புல் அர்ஷில் கரீம்’ (நன்கறிந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், சிறப்புக்குரிய அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று பிரார்த்தித்து வந்தார்கள்.64
Book :97
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عِنْدَ الكَرْبِ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَلِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ رَبُّ العَرْشِ الكَرِيمِ»
சமீப விமர்சனங்கள்