Author: Farook

Bukhari-7425

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7425. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் குர்ஆன் வசனங்களை ஒன்றுதிரட்டும்படி கேட்டு) என்னிடம் ஆளனுப்பினார்கள். ஆகவே, நான் குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அப்போது ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை அன்சாரியான அபூகுஸைமா (ரலி) அவர்களிடம் கிடைக்கப்பெற்றேன். அவரல்லாத வேறொருவரிடமும் அதை நான் காணவில்லை.

அந்த இறுதிப் பகுதி, “உங்களிலிருந்தே ஓர் இறைத்தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்” என்பதிலிருந்து அல்பராஅத் அத்தியாயத்தின் இறுதி(யான ‘அவனே மகத்தான அரியணையின் அதிபதி ஆவான்’ என்பது)வரை உள்ளதாகும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.63
அத்தியாயம் : 97


«أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ فَتَتَبَّعْتُ القُرْآنَ، حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرِهِ»، {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} [التوبة: 128] حَتَّى خَاتِمَةِ بَرَاءَةَ. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ بِهَذَا، وَقَالَ: مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ


Bukhari-7424

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7424. அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி(ஸல்) அவர்கள், ‘அபூ தர்ரே! இது (-சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று சொன்னேன். அவர்கள், ‘இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்குக் கீழே) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம், ‘நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்’ என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்று இருக்கும். உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதி நாளில்) உதயமாகும்’ என்று சொல்லிவிட்டு, ‘அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்’ (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38 வது வசனத்தை) ஓதினார்கள்.62

Book :97


دَخَلْتُ المَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، هَلْ تَدْرِي أَيْنَ تَذْهَبُ هَذِهِ؟»، قَالَ: قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” فَإِنَّهَا تَذْهَبُ تَسْتَأْذِنُ فِي السُّجُودِ فَيُؤْذَنُ لَهَا، وَكَأَنَّهَا قَدْ قِيلَ لَهَا: ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ، فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا، ثُمَّ قَرَأَ: ذَلِكَ مُسْتَقَرٌّ لَهَا ” فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ


Bukhari-7423

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7423. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரிஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்கு மேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியாசனம் (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே

«مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ، وَأَقَامَ الصَّلاَةَ، وَصَامَ رَمَضَانَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الجَنَّةَ، هَاجَرَ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نُنَبِّئُ النَّاسَ بِذَلِكَ؟ قَالَ: «إِنَّ فِي الجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ، أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ، كُلُّ دَرَجَتَيْنِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الفِرْدَوْسَ، فَإِنَّهُ أَوْسَطُ الجَنَّةِ، وَأَعْلَى الجَنَّةِ، وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الجَنَّةِ»


Bukhari-7422

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7422. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று எழுதினான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.60

Book :97


إِنَّ اللَّهَ لَمَّا قَضَى الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي


Bukhari-7421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7421. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக (‘வலீமா’ விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: ‘அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்து வைத்தான்’ என்று சொல்வார்கள்.

Book :97


نَزَلَتْ آيَةُ الحِجَابِ فِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَأَطْعَمَ عَلَيْهَا يَوْمَئِذٍ خُبْزًا وَلَحْمًا، وَكَانَتْ تَفْخَرُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ تَقُولُ: إِنَّ اللَّهَ أَنْكَحَنِي فِي السَّمَاءِ


Bukhari-7420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7420. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்’ என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ‘உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்’ என்று சொல்வார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

‘(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை

جَاءَ زَيْدُ بْنُ حَارِثَةَ يَشْكُو، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اتَّقِ اللَّهَ، وَأَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ»، قَالَ أَنَسٌ: لَوْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَاتِمًا شَيْئًا لَكَتَمَ هَذِهِ، قَالَ: فَكَانَتْ زَيْنَبُ تَفْخَرُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  تَقُولُ: زَوَّجَكُنَّ أَهَالِيكُنَّ، وَزَوَّجَنِي اللَّهُ تَعَالَى مِنْ فَوْقِ سَبْعِ سَمَوَاتٍ، وَعَنْ ثَابِتٍ: {وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ} [الأحزاب: 37]، «نَزَلَتْ فِي شَأْنِ زَيْنَبَ وَزَيْدِ بْنِ حَارِثَةَ»


Bukhari-7419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7419. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது. வாரிவழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போது வரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல்லுங்கள். அதுவும் கூட அவனுடைய வலக்கரத்தில் இருப்பதைக் குறைத்துவிடவில்லை. (வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபோது) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனுடைய மற்றொரு கரத்தில் ‘கொடைப் பொழிவு’ அல்லது ‘கொடைக்குறைவு’ உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகிறான்; (சிலரைத்) தாழ்த்துகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.58

Book :97


«إِنَّ يَمِينَ اللَّهِ مَلْأَى لاَ يَغِيضُهَا نَفَقَةٌ، سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ، أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، فَإِنَّهُ لَمْ يَنْقُصْ مَا فِي يَمِينِهِ، وَعَرْشُهُ عَلَى المَاءِ، وَبِيَدِهِ الأُخْرَى الفَيْضُ – أَوِ القَبْضُ – يَرْفَعُ وَيَخْفِضُ»


Bukhari-7418

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்). அவனே மகத்தான அரியாசனத்தின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்).56 அபுல் ஆ-யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான் எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள இஸ்தவா’ எனும் சொல்லுக்கு உயர்ந்தான்’ என்று பொருளாகும். சவ்வா’ என்பதற்குப் படைத்தான்’ என்று பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது அமைந்தான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு அர்ஷின் மேலே ஆனான் என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியாசனத்துக்கு உரியவன்; புகழுக்குரியவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு கண்ணியமிக்கவன்’ என்று பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, அன்பு மிக்கவன்’என்று பொருள்.

7418. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூதமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர்.

إِنِّي عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ بَنِي تَمِيمٍ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا بَنِي تَمِيمٍ»، قَالُوا: بَشَّرْتَنَا فَأَعْطِنَا، فَدَخَلَ نَاسٌ مِنْ أَهْلِ اليَمَنِ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا أَهْلَ اليَمَنِ، إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ»، قَالُوا: قَبِلْنَا، جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ، وَلِنَسْأَلَكَ عَنْ أَوَّلِ هَذَا الأَمْرِ مَا كَانَ، قَالَ: «كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ قَبْلَهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى المَاءِ، ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ»، ثُمَّ أَتَانِي رَجُلٌ، فَقَالَ: يَا عِمْرَانُ أَدْرِكْ نَاقَتَكَ فَقَدْ ذَهَبَتْ، فَانْطَلَقْتُ أَطْلُبُهَا، فَإِذَا السَّرَابُ يَنْقَطِعُ دُونَهَا، وَايْمُ اللَّهِ لَوَدِدْتُ أَنَّهَا قَدْ ذَهَبَتْ وَلَمْ أَقُمْ


Bukhari-7417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 (நபியே!) சாட்சியத்தில் மிகவும் பெரியது எது? எனக் கேளும். அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சி ஆவான் எனக் கூறும் (எனும் 6:19ஆவது இறைவசனம்). இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை ஒரு பொருள் (ஷைஉ) என்று குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உரையான குர்ஆனைப் பற்றி ஒரு பொருள் (ஷைஉ) என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவனது (திரு)முகத்தைத் தவிர அனைத்துமே அழியக் கூடியவைதாம். (28:88)54

7417. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘குர்ஆனிலிருந்து உங்களுடன் (மனனமாக) ஏதேனும் ஒன்று (ஷைஉ) இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘ஆம். இன்ன , இன்ன ‘ என்று சில அத்தியாயக்ளைப் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்.55

Book : 97


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: «أَمَعَكَ مِنَ القُرْآنِ شَيْءٌ؟»، قَالَ: نَعَمْ، سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا، لِسُوَرٍ سَمَّاهَا


Bukhari-7416

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 20

அல்லாஹ்வை விடவும் ரோஷமுள்ளவர் எவருமில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. இந்த ஹதீஸை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

7416. முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்:

ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், ‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்’ என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடைசெய்துவிட்டான்.

(திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வை விட வேறெவரும்

قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ: لَوْ رَأَيْتُ رَجُلًا مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفَحٍ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ، وَاللَّهِ لَأَنَا أَغْيَرُ مِنْهُ، وَاللَّهُ أَغْيَرُ مِنِّي، وَمِنْ أَجْلِ غَيْرَةِ اللَّهِ حَرَّمَ الفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ العُذْرُ مِنَ اللَّهِ، وَمِنْ أَجْلِ ذَلِكَ بَعَثَ المُبَشِّرِينَ وَالمُنْذِرِينَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ المِدْحَةُ مِنَ اللَّهِ، وَمِنْ أَجْلِ ذَلِكَ وَعَدَ اللَّهُ الجَنَّةَ»


Next Page » « Previous Page