Author: Farook

Bukhari-7384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7384. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும்; இறுதியில் அம்லங்களின் அதிபதி (யான அல்லாஹ்,) நரகத்தில் தன்னுடைய பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக் கொள்ளும் பிறகு, ‘போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!’ என்று கூறும். சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மூன்று வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 19

Book :97


لاَ يَزَالُ يُلْقَى فِيهَا وَتَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ، حَتَّى يَضَعَ فِيهَا رَبُّ العَالَمِينَ قَدَمَهُ، فَيَنْزَوِي بَعْضُهَا إِلَى بَعْضٍ، ثُمَّ تَقُولُ: قَدْ، قَدْ، بِعِزَّتِكَ وَكَرَمِكَ، وَلاَ تَزَالُ الجَنَّةُ تَفْضُلُ، حَتَّى يُنْشِئَ اللَّهُ لَهَا خَلْقًا، فَيُسْكِنَهُمْ فَضْلَ الجَنَّةِ


Bukhari-7383

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 அல்லாஹ் கூறுகின்றான்: அவன் கண்ணியமிக்கவன்; ஞானமிக்கவன் (29:42). கண்ணியத்தின் அதிபதியான உங்கள் இறைவன் அவர்கள் கூறும் (தரக் குறைவான) பண்புகளை விட்டு மிகவும் தூயவன் (37:180). கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்குமே உரியது (63:8). அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் அவனுடைய பண்புகள் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்). நபி (ஸல்) அவர்கள், (மறுமை நாளில்) நரகம், போதும்! போதும்! உன் கண்ணியத் தின் மீதாணையாக! என்று சொல்லும் எனக் கூறினார்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் நரகத்திலிருந்து இறை நம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப் பட்ட பிறகு) சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர்தாம் நரகவாசிகளிலேயே இறுதியாக சொர்க்கம் செல்பவராவார். அவர், என் இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டு வேறு பக்கம் திருப்பிவிடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! நான் உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன் என்று சொல்வார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: வ-மையும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், உனக்கு இதுவும் இதைப்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقُولُ: «أَعُوذُ بِعِزَّتِكَ، الَّذِي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ الَّذِي لاَ يَمُوتُ، وَالجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ»


Bukhari-7382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 (அவனே) மனிதர்களின் அரசன் (மலிக்கிந் நாஸ்)’ எனும் (114:2ஆவது) இறைவசனம். இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.13

7382. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. 14

Book : 97


يَقْبِضُ اللَّهُ الأَرْضَ يَوْمَ القِيَامَةِ، وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا المَلِكُ أَيْنَ مُلُوكُ الأَرْضِ “


Bukhari-7381

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 அமைதியளிப்பவன்(அஸ்ஸலாம்); அபயம் தருபவன் (அல்முஃமின்) எனும் (59:23ஆவது) இறைவசனம்.

7381. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலல்லாஹ்’ (அல்லாஹ்வின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (அத்திஹிய்யாத் அமர்வில்) சொல்லிவந்தோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே சாந்தி அளிப்பவன் (அஸ்ஸலாம்). (எனவே, இப்படிச் சொல்லாதீர்கள்.) மாறாக, ‘(சொல், செயல், பொருள் சார்ந்த) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் அவனுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய சுபிட்சமும் ஏற்படட்டும். எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அனைவர்) மீதும் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்’ எனக் கூறுங்கள் என்றார்கள்.12

Book : 97


كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَقُولُ: السَّلاَمُ عَلَى اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ


Bukhari-7380

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7380. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள்.11

Book :97


«مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهُ، فَقَدْ كَذَبَ، وَهُوَ يَقُولُ»: {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ} [الأنعام: 103]، «وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ الغَيْبَ، فَقَدْ كَذَبَ، وَهُوَ يَقُولُ»: لاَ يَعْلَمُ الغَيْبَ إِلَّا اللَّهُ


Bukhari-7379

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 அல்லாஹ் மறைவானவற்றை அறிபவன்; (தான் அறிந்துள்ள) மறைவான விஷயங் களை அவன் எவருக்கும் வெளிப்படுத்த மாட்டான் எனும் (72:26ஆவது) இறை வசனம். நிச்சயமாக மறுமை(நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது (31:34). இ(ந்த வேதத்)தை தான் அறிந்துள்ளதற் கேற்பவே அல்லாஹ் அருளினான். (4:166) அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (35:11) மறுமை நாள் பற்றிய அறிவு அவனிடமே விடப்பட்டுள்ளது. (41:47) யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான) அழ்ழாஹிர்’ (வெளிப்படையானவன்) என்பதற்கு தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் வெளிப்படையாக அறிபவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) அல்பாத்தின்’ (அந்தரங்கமானவன்) என்பதற்கு தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் அகமியமாக அறிபவன்’ என்று பொருள்.

7379. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும்

مَفَاتِيحُ الغَيْبِ خَمْسٌ، لاَ يَعْلَمُهَا إِلَّا اللَّهُ: لاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي المَطَرُ أَحَدٌ إِلَّا اللَّهُ، وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلَّا اللَّهُ


Bukhari-7378

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வ-மையுள்ளவன்; உறுதியானவன் எனும் (51:58ஆவது) இறைவசனம்.

7378. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.9

Book : 97


«مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ»


Bukhari-7377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7377. உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களின் புதல்வியரில் ஒருவரின் (ஸைனப்(ரலி) அவர்களின்) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ ஸைனபிடம் சென்று, ‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியது தான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால், அவர்களின் புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பிவைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் அக்குழநதை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட

كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَسُولُ إِحْدَى بَنَاتِهِ، يَدْعُوهُ إِلَى ابْنِهَا فِي المَوْتِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْجِعْ إِلَيْهَا فَأَخْبِرْهَا أَنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ»، فَأَعَادَتِ الرَّسُولَ أَنَّهَا قَدْ أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامَ مَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، فَدُفِعَ الصَّبِيُّ إِلَيْهِ وَنَفْسُهُ تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ، فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ لَهُ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ قَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»


Bukhari-7376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 (நபியே!) கூறுங்கள்: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழையுங்கள்; அல்லது அர் ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங்கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும் எனும் (17:110ஆவது) இறைவசனம்.

7376. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.

என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.7

Book : 97a


«لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ»


Bukhari-7375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7375. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், ‘ஏனெனில், அந்த பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள்.

Book :97


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ، وَكَانَ يَقْرَأُ لِأَصْحَابِهِ فِي صَلاَتِهِمْ فَيَخْتِمُ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «سَلُوهُ لِأَيِّ شَيْءٍ يَصْنَعُ ذَلِكَ؟»، فَسَأَلُوهُ، فَقَالَ: لِأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ»


Next Page » « Previous Page