Author: Farook

Bukhari-7395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7395. அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது ‘பிஸ்மிக்க நமூத்து வ நஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நாங்கள் இறக்கிறோம்; உயிர் வாழவும் செய்கிறோம்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) விழித்தெழும்போது ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.30

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، قَالَ: «بِاسْمِكَ نَمُوتُ وَنَحْيَا»، فَإِذَا اسْتَيْقَظَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ»


Bukhari-7394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7394. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமர்த்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள்.29

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ»، وَإِذَا أَصْبَحَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ»


Bukhari-7393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்.

7393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள்.

மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:

பிஸ்மிக ரப்பி வளஃத்து ஜன்பீ, வபிக அர்ஃபவுஹு. இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபஃக்ஃபிர் லஹா, வஇன் அர்ஸல்த்தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன்.

(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


புகாரி இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை மாலிக் இமாம் அவர்களைப் போன்று (அதாவது முதாபஅத்

إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ، وَلْيَقُلْ: «بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ»


Bukhari-7392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. (அவற்றில் ஒன்றான) துல் ஜலால்’ என்பதற்கு மகத்துவமிக்கவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) அல்பர்ரு’ என்பதற்கு மென்மையானவன்’ என்று பொருள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

7392. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.27

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸா’ எனும் சொல்லுக்கு ‘மனனமிடல்’ என்று பொருள்.

Book : 97


«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ» أَحْصَيْنَاهُ حَفِظْنَاهُ


Bukhari-7391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகின்றோம். (6:110)

7391. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம் ‘இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!’ என்பதாகவே இருந்தது. 26

Book : 97


أَكْثَرُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْلِفُ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»


Bukhari-7390

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 (நபியே!) அவனே ஆற்றல்மிக்கவன்’ என்று சொல்லுங்கள் எனும் (6:65ஆவது) இறை வசனம்.

7390. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் ‘இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُ أَصْحَابَهُ الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ القُرْآنِ يَقُولُ: ” إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الفَرِيضَةِ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ هَذَا الأَمْرَ – ثُمَّ تُسَمِّيهِ بِعَيْنِهِ – خَيْرًا لِي فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – قَالَ: أَوْ فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِي بِهِ


Bukhari-7389

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7389. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்து, ‘(நபியே!) உங்கள் சமுதாயத்தாரின் சொல்லையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவிமடுத்தான்’ என்றார்கள்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.24

Book :97


إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ نَادَانِي قَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ وَمَا رَدُّوا عَلَيْكَ


Bukhari-7387 & 7388

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7387. & 7388. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்கமாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கிறாய்!’ என்று கூறுங்கள் என்றார்கள்.23

Book :97


أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي، قَالَ: «قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مِنْ عِنْدِكَ مَغْفِرَةً إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ»


Bukhari-7386

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

அல்லாஹ் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான் எனும் (அல்குர்ஆன்: 4:134) ஆவது இறைவசனம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒலிகள் அனைத்தையும் (துல்லியமாகக்) கேட்கின்ற அளவிற்கு விசாலமான செவியாற்றல் உள்ள அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

(நபியவர்களிடம் தன் கணவன் குறித்து முறையிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் தொடர்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு, உயர்ந்தோன் அல்லாஹ் (நபியே!) தன் துணைவன் குறித்து உம்மிடம் முறையிட்டுக் கொண்டிருந்த அவளது சொல்லை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான் எனும் (அல்குர்ஆன்: 58:1) ஆவது வசனத்தை அருளினான்.

7386. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லிவந்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களைக்

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَكُنَّا إِذَا عَلَوْنَا كَبَّرْنَا، فَقَالَ: «ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، تَدْعُونَ سَمِيعًا بَصِيرًا قَرِيبًا»، ثُمَّ أَتَى عَلَيَّ وَأَنَا أَقُولُ فِي نَفْسِي: لاَ حَوْلَ ] وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَقَالَ لِي: «يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، قُلْ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الجَنَّةِ، – أَوْ قَالَ أَلاَ أَدُلُّكَ بِهِ -»


Bukhari-7385

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 அவனே வானங்களையும் பூமியையும் உண்மை(க்கு எடுத்துக்காட்டாக அமையும் வகை)யில் படைத்தான் எனும் (6:73ஆவது) இறைவசனம்.

7385. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமைநாள் உண்மையானது. இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன் மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.

ஸாபித் இப்னு முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو مِنَ اللَّيْلِ: «اللَّهُمَّ لَكَ الحَمْدُ، أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، لَكَ الحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، لَكَ الحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، قَوْلُكَ الحَقُّ، وَوَعْدُكَ الحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ لِي غَيْرُكَ»

حَدَّثَنَا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا، وَقَالَ: «أَنْتَ الحَقُّ وَقَوْلُكَ الحَقُّ»


Next Page » « Previous Page