Author: Farook

Bukhari-7260

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7260. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்’ என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, ‘இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்’ என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, ‘இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்’ என்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘சரி சொல்’ என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிரமாவாசி,) ‘என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்து வந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்துவிட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். எனவே, நான் அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர்களிடம் கேட்டேன்.

بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَامَ  رَجُلٌ مِنَ الأَعْرَابِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اقْضِ لِي بِكِتَابِ اللَّهِ، فَقَامَ خَصْمُهُ فَقَالَ: صَدَقَ يَا رَسُولَ اللَّهِ، اقْضِ لَهُ بِكِتَابِ اللَّهِ وَأْذَنْ لِي، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ»، فَقَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، – وَالعَسِيفُ: الأَجِيرُ – فَزَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةٍ مِنَ الغَنَمِ وَوَلِيدَةٍ، ثُمَّ سَأَلْتُ أَهْلَ العِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى امْرَأَتِهِ الرَّجْمَ، وَأَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا الوَلِيدَةُ وَالغَنَمُ فَرُدُّوهَا، وَأَمَّا ابْنُكَ فَعَلَيْهِ جَلْدُ مِائَةٍ، وَتَغْرِيبُ عَامٍ، وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ – لِرَجُلٍ مِنْ أَسْلَمَ – فَاغْدُ عَلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا» فَغَدَا عَلَيْهَا أُنَيْسٌ فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا


Bukhari-7258 & 7259.

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7258. & 7259. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டு வந்தததாக அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.16

Book :95


«أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-7257

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7257. அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அவர்களுக்கு (அன்சாரிகளில்) ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, ‘இதில் நுழையுங்கள்’ என்றார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், ‘நாம் இந்த (நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்’ என்று கூறினர். எனவே, இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நெருப்பில் புக முனைந்தோர் குறித்து, ‘அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களிடம், ‘அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்’ என்றார்கள்.15

Book :95


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ جَيْشًا، وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا فَأَوْقَدَ نَارًا وَقَالَ: ادْخُلُوهَا، فَأَرَادُوا أَنْ يَدْخُلُوهَا، وَقَالَ آخَرُونَ: إِنَّمَا فَرَرْنَا مِنْهَا، فَذَكَرُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِلَّذِينَ أَرَادُوا أَنْ يَدْخُلُوهَا: «لَوْ دَخَلُوهَا لَمْ يَزَالُوا فِيهَا إِلَى يَوْمِ القِيَامَةِ»، وَقَالَ لِلْآخَرِينَ: «لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي المَعْرُوفِ»


Bukhari-7256

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7256. உமர்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் (எனக்கு) ஒருவர் (நண்பராக) இருந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது, நான் அங்கு செல்வேன்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை(ச் சேகரித்து) அவரிடம் கொண்டு செல்வேன். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது அவர் (அங்கு) செல்வார்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை அவர் என்னிடம் கொண்டு வருவார்.14

Book :95


«وَكَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، إِذَا غَابَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَهِدْتُهُ أَتَيْتُهُ بِمَا يَكُونُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِذَا غِبْتُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَهِدَهُ أَتَانِي بِمَا يَكُونُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-7255

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7255. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (என்னுடைய) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா ஆவார்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.13

Book :95


«لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ»


Bukhari-7254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7254. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம் ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்’ என்றார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.12

Book :95


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِأَهْلِ نَجْرَانَ: «لَأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلًا أَمِينًا حَقَّ أَمِينٍ»، فَاسْتَشْرَفَ لَهَا أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ


Bukhari-7253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7253. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் அபூ தல்ஹா அல்அன்சாரி(ரலி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருககு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, ‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’ என்றார். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள், ‘அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்கள் உடைத்தெறியும்’ என்றார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களுடைய சாடியொன்றை எடுத்து அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11

Book :95


«كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ الأَنْصَارِيَّ، وَأَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ – وَهُوَ تَمْرٌ -»، فَجَاءَهُمْ آتٍ فَقَالَ: إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أَنَسُ، قُمْ إِلَى هَذِهِ الجِرَارِ فَاكْسِرْهَا، قَالَ أَنَسٌ: «فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى انْكَسَرَتْ»


Bukhari-7252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் ‘(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்’ எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, ‘நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.10

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ المَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا} [البقرة: 144]، فَوُجِّهَ نَحْوَ الكَعْبَةِ، وَصَلَّى مَعَهُ رَجُلٌ العَصْرَ “، ثُمَّ خَرَجَ فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ، فَقَالَ: هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّهُ  قَدْ وُجِّهَ إِلَى الكَعْبَةِ، فَانْحَرَفُوا وَهُمْ رُكُوعٌ فِي صَلاَةِ العَصْرِ


Bukhari-7251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7251. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மக்கள் ‘குபா’ எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்’ என்றார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.9

Book :95


بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا»، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الكَعْبَةِ


Bukhari-7250

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7250. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘துல்யதைன் கூறுவது உண்மையா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்’ என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8

Book :95


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو اليَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهِ، أَمْ نَسِيتَ؟ فَقَالَ: «أَصَدَقَ ذُو اليَدَيْنِ؟»، فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ سَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ، ثُمَّ رَفَعَ


Next Page » « Previous Page