Author: Farook

Bukhari-7249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7249. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம், ‘தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டுவிட்டதா?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், ‘ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்களே?’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்த பின்பு (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் (சஜ்தா சஹ்வு) இரண்டு முறை செய்தார்கள்.7

Book :95


صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ خَمْسًا، فَقِيلَ: أَزِيدَ فِي الصَّلاَةِ؟ قَالَ: «وَمَا ذَاكَ؟»، قَالُوا: صَلَّيْتَ خَمْسًا، فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ


Bukhari-7248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6

Book :95


«إِنَّ بِلاَلًا يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»


Bukhari-7247

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7247. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள்.5

Book :95


«لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ قَالَ يُنَادِي – لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ الفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا – وَجَمَعَ يَحْيَى كَفَّيْهِ – حَتَّى يَقُولَ هَكَذَا» وَمَدَّ يَحْيَى إِصْبَعَيْهِ السَّبَّابَتَيْنِ


Bukhari-7246

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 தொழுகை அறிவிப்பு (பாங்கு), தொழுகை, நோன்பு, பாகப் பிரிவினை மற்றும் இதரச் சட்டங்கள் ஆகியவற்றில் வாய்மையான ஒருவரின் செய்தியை அனுமதிப்பது தொடர்பாக வந்துள்ளவை.2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் ஒவ்வொரு குழுவினரிலிருந்தும் சிலர் புறப்பட்டுச் சென்று, மார்க்கத்தைக் கற்றுத் திரும்பிவந்து, தம் சமூகத்தாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையிலிருந்து) பாதுகாத்துக்கொள்வார்கள். (9:122)3 ஒரு தனிமனிதர்கூட சிலர்’ (தாயிஃபத்) என அழைக்கப்படுவதுண்டு. இறைநம்பிக்கை யாளர்களில் இரு குழுவினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான் (49:9). (இங்கு குழுவினர்’ என்பதைக் குறிக்க தாயிஃபத்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரு தனி நபர்கள் சண்டையிட்டுக்கொள்வதும் இவ்வசனத்தின் பொருளில் அடங்கும். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக் கொள்ளுங்கள் (49:6). (தனிநபர் தகவலுக்கு மரியாதை இல்லாயானால்,) நபி (ஸல்)

أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا، – وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»


Bukhari-7245

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7245. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஹிஜ்ரத் மட்டும் நடந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்கள் ஒரு ‘பள்ளத்தாக்கில்’ அல்லது ‘கணவாயில்’ நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலும் கணவாயிலும்தான் நடந்து செல்வேன்.

என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.22

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :94


«لَوْلاَ الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَشِعْبَهَا»


Bukhari-7244

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7244. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்கள் ஒரு பள்ளத்தாக்கிலும் அன்சாரிகள் ‘வேறொரு பள்ளத்தாக்கிலும்’ அல்லது ‘மலைக் கணவாயிலும்’ நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் ‘பள்ளத்தாக்கு’ அல்லது ‘கணவாயில்’ தான் நடந்து செல்வேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.21

Book :94


«لَوْلاَ الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا – أَوْ شِعْبًا – لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ، – أَوْ شِعْبَ الأَنْصَارِ -»


Bukhari-7243

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7243. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம், (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹத்தீம் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, “இது கஅபாவில் சேர்ந்ததா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், “அப்படியானால் கஅபாவுடன் இதை அவர்கள் இணைக்காததற்குக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உன் (குறைஷி) சமூகத்தாருக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “தாம் விரும்பியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் விரும்பாதவர்களை (உள்ளே நுழைய விடாமல்) தடுத்துவிடுவதற்காகவும் தான் உன் சமூகத்தார் இவ்வாறு செய்தார்கள். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் மனதில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போன்று ஆக்கியிருப்பேன்” என்று சொன்னார்கள்.20

அத்தியாயம் : 94


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ، أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي البَيْتِ؟ قَالَ: «إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ»، قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا، قَالَ: «فَعَلَ ذَاكِ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا، وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ، أَنْ أُدْخِلَ الجَدْرَ فِي البَيْتِ، وَأَنْ أَلْصِقْ بَابَهُ فِي الأَرْضِ»


Bukhari-7242

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7242. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் யார் என்னைப் போல் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கிற நிலையில் நான் உள்ளேன்’ என்று பதிலளித்தார்கள். மக்கள் (தொடர் நோன்பைக்) கைவிட மறுத்தபோது அவர்களுடன் சேர்ந்து ஒரு நாளும் அதன் பிறகு ஒரு நாளும் நபியவர்கள் தொடர்நோன்பு நோற்றார்கள். அதற்குள் (அடுத்த) மாதப் பிறையைக் கண்டார்கள். அப்போது ‘பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர் நோன்பை) அதிகமாக்க வைத்திருப்பேன்’ என்று அவர்களைக் கண்டிப்பவர்களைப் போன்று சொன்னார்கள்.19

Book :94


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الوِصَالِ»، قَالُوا: فَإِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «أَيُّكُمْ مِثْلِي، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ»، فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا، وَاصَلَ بِهِمْ يَوْمًا، ثُمَّ يَوْمًا، ثُمَّ رَأَوُا الهِلَالَ فَقَالَ: «لَوْ تَأَخَّرَ لَزِدْتُكُمْ كَالْمُنَكِّلِ لَهُمْ»


Bukhari-7241

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7241. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ரமளான்) மாதக் கடைசியில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) மக்கள் சிலரும் தொடர் நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், ‘எனக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாள்கள்) நீட்டிக்கப்பட்டாலும் என்னால் தொடர் நோன்பு நோற்க முடியும். அப்போது (என்னைப் பார்த்து தொடர்நோப்பு நோற்று, வணக்க வழிபாடுகளில்) மிதமிஞ்சி ஈடுபடுபடுவர்கள் தங்களின் போக்கைக் கைவிட வேண்டியது வரும். நான், உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கும் நிலையில் நான் உள்ளேன்’ என்றார்கள்.18

இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :94


وَاصَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرَ الشَّهْرِ، وَوَاصَلَ أُنَاسٌ مِنَ النَّاسِ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَوْ مُدَّ بِيَ الشَّهْرُ لَوَاصَلْتُ وِصَالًا يَدَعُ المُتَعَمِّقُونَ تَعَمُّقَهُمْ، إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أَظَلُّ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ» تَابَعَهُ سُلَيْمَانُ بْنُ مُغِيرَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7240

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல்துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :94


«لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ»


Next Page » « Previous Page