Author: Farook

Bukhari-7081

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 (விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும். அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.

7081. ‘விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாம்) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.21

Book : 92


«سَتَكُونُ فِتَنٌ، القَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ القَائِمِ، وَالقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ المَاشِي، وَالمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي، مَنْ تَشَرَّفَ لَهَا تَسْتَشْرِفْهُ، فَمَنْ وَجَدَ مِنْهَا مَلْجَأً، أَوْ مَعَاذًا، فَلْيَعُذْ بِهِ»


Bukhari-7080

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7080. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களை மெளனம் காக்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு (மக்கள் மெளனமான) பின்னர், ‘எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்’ என்றார்கள்.

பகுதி 9

(விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும், அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.

Book :92


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ» ثُمَّ قَالَ: «لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-7079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7079. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book :92


«لاَ تَرْتَدُّوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-7078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7078. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மெளனமாக இருந்தார்கள்.) பிறகு ‘இது நஹ்ர் உடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னோம். நபியவர்கள், ‘இது எந்த ஊர்?’ இது புனித நகரமல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம், இறைத்தூதர் அவர்களே’ என்று சொன்னோம். நபியவர்கள், ‘இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னோம். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களின் இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புநிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களின் மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே’

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فَقَالَ: «أَلاَ تَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ: «أَلَيْسَ بِيَوْمِ النَّحْرِ» قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَيُّ بَلَدٍ هَذَا، أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الحَرَامِ» قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، وَأَبْشَارَكُمْ، عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ» قُلْنَا: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ، فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَإِنَّهُ رُبَّ مُبَلِّغٍ يُبَلِّغُهُ لِمَنْ هُوَ أَوْعَى لَهُ» فَكَانَ كَذَلِكَ، قَالَ: «لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ» فَلَمَّا كَانَ يَوْمُ حُرِّقَ ابْنُ الحَضْرَمِيِّ، حِينَ حَرَّقَهُ جَارِيَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: أَشْرِفُوا عَلَى أَبِي بَكْرَةَ، فَقَالُوا: هَذَا أَبُو بَكْرَةَ يَرَاكَ، قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَحَدَّثَتْنِي أُمِّي عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ قَالَ: لَوْ دَخَلُوا عَلَيَّ مَا بَهَشْتُ بِقَصَبَةٍ


Bukhari-7077

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7077. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 92


«لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-7076

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 ,,எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்கின்ற நிராகரிப்பாளர்களாய் மாறிவிட வேண்டாம்,, என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

7076. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவச் செயலாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற குற்றச்செயல்) ஆகும்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.17

Book : 92


«سِبَابُ المُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ»


Bukhari-7075

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7075. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நம்முடைய பள்ளிவாசலில் அல்லது நம்முடைய கடைவீதியில் நடந்து சென்றால், அவர் ‘அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்’ அல்லது ‘தம் கைக்குள் (அதன் முனையை) மூடிவைத்துக் கொள்ளட்டும்’. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறிவிடக் கூடாது.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

Book :92


إِذَا مَرَّ أَحَدُكُمْ فِي مَسْجِدِنَا، أَوْ فِي سُوقِنَا، وَمَعَهُ نَبْلٌ، فَلْيُمْسِكْ عَلَى نِصَالِهَا، – أَوْ قَالَ: فَلْيَقْبِضْ بِكَفِّهِ -، أَنْ يُصِيبَ أَحَدًا مِنَ المُسْلِمِينَ مِنْهَا شَيْءٌ


Bukhari-7074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7074. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் பள்ளிவாசலில் அம்புகள் சிலவற்றை அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவற்றின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க் கொண்டு எந்த முஸ்லிமையும் கீறிவிடாதபடி செல்லுமாறு அவருக்கக் கட்டளையிட்டார்கள்.

Book :92


أَنَّ رَجُلًا مَرَّ فِي المَسْجِدِ بِأَسْهُمٍ قَدْ أَبْدَى نُصُولَهَا، «فَأُمِرَ أَنْ يَأْخُذَ بِنُصُولِهَا، لاَ يَخْدِشُ مُسْلِمًا»


Bukhari-7073

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7073. சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் ‘அபூ முஹம்மதே! (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்துசென்றார்; அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அம்புகளின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க்கொள்’ என்று அவரிடம் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?’ என்று வினவினேன். அதற்கு அம்ர்(ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.16

Book :92


مَرَّ رَجُلٌ بِسِهَامٍ فِي المَسْجِدِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ بِنِصَالِهَا» قَالَ: نَعَمْ


Bukhari-7072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7072. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.15

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :92


«لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي، لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ»


Next Page » « Previous Page