Author: Farook

Bukhari-7071

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7071. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

Book :92


«مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا»


Bukhari-7070

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7070. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :92


«مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا»


Bukhari-7069

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7069. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

ஒரு(நாள்) இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திடீரென) பதற்றத்துடன் விழித்தெழுந்து ‘அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ் இறக்கிவைத்த கருவூலங்கள் தாம் என்ன! (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட குழப்பங்கள் தாம் என்ன! -தம் துணைவியரை மனத்தில் கொண்டு – இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பி விடுகிறவர் யார்? அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்’ என்று கூறினார்கள்.13

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :92


اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَزِعًا، يَقُولُ: «سُبْحَانَ اللَّهِ، مَاذَا أَنْزَلَ اللَّهُ مِنَ الخَزَائِنِ، وَمَاذَا أُنْزِلَ مِنَ الفِتَنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الحُجُرَاتِ – يُرِيدُ أَزْوَاجَهُ لِكَيْ يُصَلِّينَ – رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ»


Bukhari-7068

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.12

7068. ஸுபைர் பின் அதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

Book : 92


أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنَ الحَجَّاجِ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ» سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7067

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7067. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம், ‘கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்’ என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

Book :92


«مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكْهُمُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ»


Bukhari-7066

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7066. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலக்கட்டம் வரும். அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

அபூ மூஸா(ரலி) அவர்கள், ‘ ‘ஹர்ஜ்’ என்பது அபிசீனிய மொழியில் கொலையைக் குறிக்கும்’ என்று கூறுகிறார்கள்.

Book :92


«بَيْنَ يَدَيِ السَّاعَةِ أَيَّامُ الهَرْجِ ، يَزُولُ فِيهَا العِلْمُ وَيَظْهَرُ فِيهَا الجَهْلُ» قَالَ أَبُو مُوسَى: ” وَالهَرْجُ: القَتْلُ بِلِسَانِ الحَبَشَةِ


Bukhari-7065

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7065. அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸா(ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்கள், ‘நான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லக் கேட்டேன். மேலும், ‘ஹர்ஜ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘கொலை’ என்று பொருள்’ எனக் கூறினார்கள்.

Book :92


مِثْلَهُ، وَالهَرْجُ: بِلِسَانِ الحَبَشَةِ القَتْلُ


Bukhari-7064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7064. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(ஒரு முறை) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்கள் ‘மறுமை நாளுக்கு முன்பு ஒரு காலக்கட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்பட்டுவிடும்; அறியாமை நிலவும்; ‘ஹர்ஜ்’ பெரும்விடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனத் தெரிவித்தார்கள்.

Book :92


«إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ أَيَّامًا، يُرْفَعُ فِيهَا العِلْمُ، وَيَنْزِلُ فِيهَا الجَهْلُ، وَيَكْثُرُ فِيهَا الهَرْجُ» وَالهَرْجُ: القَتْلُ


Bukhari-7062 & 7063

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7062. & 7063. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டுவிடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

Book :92


«إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ لَأَيَّامًا، يَنْزِلُ فِيهَا الجَهْلُ، وَيُرْفَعُ فِيهَا العِلْمُ، وَيَكْثُرُ فِيهَا الهَرْجُ» وَالهَرْجُ: القَتْلُ


Bukhari-7061

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 குழப்பங்கள் தோன்றுதல்

7061. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை’ என்று பதிலளித்தார்கள்.

இதே ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறு சில அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.

Book : 92


«يَتَقَارَبُ الزَّمَانُ، وَيَنْقُصُ العَمَلُ، وَيُلْقَى الشُّحُّ، وَتَظْهَرُ الفِتَنُ، وَيَكْثُرُ الهَرْجُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّمَ هُوَ؟ قَالَ: «القَتْلُ القَتْلُ» وَقَالَ شُعَيْبٌ، وَيُونُسُ، وَاللَّيْثُ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page