Author: Farook

Bukhari-6401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62 யூதர்கள் விஷயத்தில் நாம் செய்யும் பிரார்த்தனை ஏற்கப்படும். எமது விஷயத்தில் அவர்கள் செய்யும் பிரார்த்தனை ஏற்கப் படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.

6401. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள், ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்தார்கள். உடனே, நான் (வேகப்பட்டவளாக) ‘அஸ்ஸாமு அலைக்கும், வ லஅனக்கமுல்லாஹு, வஃகளிப அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் நேரட்டும். இறைவனின் சாபம் உங்களுக்கு ஏற்படட்டும். உங்களின் மீது அவனுடைய கோபம் உண்டாகட்டும்) என்று பதிலளித்தேன்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! நளினத்தைக் கடைப்பிடிப்பாயாக! ‘வன்மையாக நடந்து கொள்வதிலிருந்து’ அல்லது ‘அருவருப்பாகப் பேசுவதிலிருந்து’ உன்னை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். நான், ‘அவர்கள் சொன்னதை தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நான்

أَنَّ اليَهُودَ أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: السَّامُ عَلَيْكَ، قَالَ: «وَعَلَيْكُمْ» فَقَالَتْ عَائِشَةُ: السَّامُ عَلَيْكُمْ، وَلَعَنَكُمُ اللَّهُ وَغَضِبَ عَلَيْكُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْلًا يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالعُنْفَ، أَوِ الفُحْشَ» قَالَتْ: أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟ قَالَ: «أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ، رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ»


Bukhari-6400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61 வெள்ளிக்கிழமையன்று (துஆ ஏற்கப்படும்) அந்த நேரத்தில் பிரார்த்திப்பது.

6400. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபுல்காசிம் நபி(ஸல்) அவர்கள், ‘வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.

Book : 80


«فِي يَوْمِ الجُمُعَةِ سَاعَةٌ، لاَ يُوَافِقُهَا مُسْلِمٌ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ» وَقَالَ بِيَدِهِ، قُلْنَا: يُقَلِّلُهَا، يُزَهِّدُهَا


Bukhari-6399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6399. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. (பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கொண்ட விரயத்தையும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

Book :80


أَنَّهُ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي. اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي»


Bukhari-6398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60 இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

6398. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.

(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால்

أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، وَحَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ


Bukhari-6397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 இணைவைப்பாளர்களுக்காகப் பிரார்த்திப்பது

6397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) துஃபைல் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின்தூதரே! தவ்ஸ் குலத்தார் (இறைவனுக்கு) மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க) மறுத்துவிட்டனர். அவர்களுக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று மக்களும் எண்ணினர். (ஆனால்) நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக’ என்று (நல்வழி வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.

Book : 80


قَدِمَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ دَوْسًا قَدْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهَا، فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ، فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ»


Bukhari-6396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6396. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப் போரின்போது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், ‘எதிரிகளுடைய புதை குழிகளையும் அவர்களின் வீடுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள், சூரியன் மறையும் வரை நடுத் தொழுகையிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்’ என்று கூறினார்கள். அஸ்ர் தொழுகையே நடுத் தொழுகையாகும்.

Book :80


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الخَنْدَقِ، فَقَالَ: «مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا، كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ» وَهِيَ صَلاَةُ العَصْرِ


Bukhari-6395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6395. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று சற்றே மாற்றி முகமன் கூறிவந்தார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான், ‘அலைக்குமுஸ் ஸாமு வல்ல அனா (மரணமும் சாபமும் உண்டாகட்டும்)’ என்று பதில் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்றார்கள். அதற்கு நான் ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொல்வதை நீங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அ(வர்கள் சொன்ன)தையே அவர்களுக்கு நான் பதிலாகக் கூறியதை நீ செவியுறவில்லையா? நான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு ஆகட்டும்) என்று (நளினமாய்) குறிப்பிட்டேனே?’ என்றார்கள்.

Book :80


كَانَ اليَهُودُ يُسَلِّمُونَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: السَّامُ عَلَيْكَ، فَفَطِنَتْ عَائِشَةُ إِلَى قَوْلِهِمْ، فَقَالَتْ: عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْلًا يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ» فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، أَوَلَمْ تَسْمَعْ مَا يَقُولُونَ؟ قَالَ: ” أَوَلَمْ تَسْمَعِي أَنِّي أَرُدُّ ذَلِكِ عَلَيْهِمْ، فَأَقُولُ: وَعَلَيْكُمْ


Bukhari-6394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6394. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு ‘குர்ரா’ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் கவலைப் பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், ‘உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்’ என்றும் சொன்னார்கள்.

Book :80


بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً يُقَالُ لَهُمْ القُرَّاءُ فَأُصِيبُوا، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ عَلَى شَيْءٍ مَا وَجَدَ عَلَيْهِمْ، فَقَنَتَ شَهْرًا فِي صَلاَةِ الفَجْرِ، وَيَقُولُ: «إِنَّ عُصَيَّةَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ»


Bukhari-6393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6393. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு ‘குனூத்’ (சிறப்பு துஆ) ஓதினார்கள். அதில், ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ஸலமா இப்னு ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் சில ஆண்டுகளை அளிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

Book :80


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ العِشَاءِ قَنَتَ: «اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ»


Bukhari-6392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 (கொடுஞ் செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த்தனை. நபி (ஸல்) அவர்கள், இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்களைப் போன்று இவர்களுக்கும் ஏழு வருடங்களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக! என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை… எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75

6392. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

(அகழ்ப் போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்து) எதிரணியினருக்கெதிராக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது, ‘அல்லாஹும்ம முன்ஸிலல் கித்தாபி, சரீஅல் ஹிஸாபி, அஹ்ஸிமில் அஹ்ஸாப, அஹ்ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்’ என்று கூறினார்கள்.

دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الأَحْزَابِ، فَقَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، سَرِيعَ الحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ»


Next Page » « Previous Page