Author: Farook

Bukhari-6235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

(மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

6235. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவையாவன:)

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.
4. நலிந்தவருக்கு உதவுவது.
5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது.
6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.
7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(பின்வருவனவற்றைச் செய்யக் கூடாதென) தடைசெய்தார்கள்.

1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.
2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு

أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ: بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَصْرِ الضَّعِيفِ، وَعَوْنِ المَظْلُومِ، وَإِفْشَاءِ السَّلاَمِ، وَإِبْرَارِ المُقْسِمِ. وَنَهَى عَنِ الشُّرْبِ فِي الفِضَّةِ، وَنَهَانَا عَنْ تَخَتُّمِ الذَّهَبِ، وَعَنْ رُكُوبِ المَيَاثِرِ، وَعَنْ لُبْسِ الحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ


Bukhari-6234

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 சிறியவர் பெரியவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

6234. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 79


«يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الكَبِيرِ، وَالمَارُّ عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ»


Bukhari-6233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

6233. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 79


«يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى المَاشِي، وَالمَاشِي عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ»


Bukhari-6232

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

6232. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 79


«يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى المَاشِي، وَالمَاشِي عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ»


Bukhari-6231

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

6231. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.10

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 79


«يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الكَبِيرِ، وَالمَارُّ عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ»


Bukhari-6230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

அஸ்ஸலாம்’ என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு ஸலாம் (முகமன்) கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். (அல்குர்ஆன்: 4:86)


6230. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது, “அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்” என்று கூறிவந்தோம்.

(பொருள்: அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்)

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ்வே ‘ஸலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கிறான்.

كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا: السَّلاَمُ عَلَى اللَّهِ قَبْلَ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى جِبْرِيلَ، السَّلاَمُ عَلَى مِيكَائِيلَ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَقَالَ : ” إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا جَلَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ، وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّهُ إِذَا قَالَ ذَلِكَ أَصَابَ كُلَّ عَبْدٍ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرْ بَعْدُ مِنَ الكَلاَمِ مَا شَاءَ


Bukhari-6229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6229. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.6

Book :79


«إِيَّاكُمْ وَالجُلُوسَ بِالطُّرُقَاتِ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا، فَقَالَ: «إِذْ أَبَيْتُمْ إِلَّا المَجْلِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ» قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ المُنْكَرِ»


Bukhari-6227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 79.

பாடம்: 1

ஸலாமின் ஆரம்ப வரலாறு.

6227. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைத் தனது தோற்றத்தில் (அதாவது, அல்லாஹ்வுக்குரிய பண்புகளான கேட்டல், பார்த்தல், பேசுதல், அறிதல் போன்றவற்றை சிறிது பிரதிபலிக்கும் வகையில் அழகிய வடிவமைப்பில்)படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது.

அவர்களைப் படைத்தபோது, “நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு முகமன் (ஸலாம்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்கள் வழித்தோன்றல்களின் முகமனும் ஆகும்” என்று இறைவன் சொன்னான்.

அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்களுக்குச் சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். “சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்கள்மீது நிலவட்டும்)” என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) ‘இறைவனின் கருணையும்’ (வ ரஹ்மத்துல்லாஹ்) என்பதைக் கூடுதலாகக் கூறினார்கள்.

ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்)

خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ، طُولُهُ سِتُّونَ ذِرَاعًا، فَلَمَّا خَلَقَهُ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ، النَّفَرِ مِنَ المَلاَئِكَةِ، جُلُوسٌ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، فَإِنَّهَا تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ، فَزَادُوهُ: وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الخَلْقُ يَنْقُصُ بَعْدُ حَتَّى الآنَ


Bukhari-6226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 128

கொட்டாவி வரும்போது வாயில் கையை வைத்துக் (கட்டுப்படுத்திக்)கொள்ளவேண்டும்.

6226. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக’ என) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் ‘ஹா’ என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 78


إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ، كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يَقُولَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَثَاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ


Next Page » « Previous Page