Author: Farook

Bukhari-6173

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6173. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களோடு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டுக் கொண்டிருந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவனை) நோக்கி நபித் தோழர்கள் சிலருடன் நடந்தார்கள். ‘பனூ மஃகாலா’ குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் இப்னு ஸய்யாத் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் அவனுடைய முதுகில் தட்டும் வரை அவன் (இவர்கள் வந்தருப்பதை) உணர வில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘நான் இறைத்தூதர்தாம் என்று நீ உறுதி கூறுகிறாயா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை (ஏறெடுத்து)ப் பார்த்துவிட்டு இப்னு ஸய்யாத்,’நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்’ என்றான்.

பிறகு இப்னு ஸய்யாத் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்று) உறுதி கூறுகின்றீர்களா?’ என்று கேட்டான். உடனே நபி(ஸல்) அவர்கள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு, ‘நான் அல்லாஹ்வின்

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ: انْطَلَقَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدَهُ يَلْعَبُ مَعَ الغِلْمَانِ فِي أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ يَوْمَئِذٍ الحُلُمَ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَهْرَهُ بِيَدِهِ، ثُمَّ قَالَ: «أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ» فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ، ثُمَّ قَالَ ابْنُ صَيَّادٍ: أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ، فَرَضَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ» ثُمَّ قَالَ لِابْنِ صَيَّادٍ: «مَاذَا تَرَى» قَالَ: يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي خَبَأْتُ لَكَ خَبِيئًا» قَالَ: هُوَ الدُّخُّ، قَالَ: «اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ» قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَأْذَنُ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَكُنْ هُوَ لاَ تُسَلَّطُ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْ هُوَ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ»


Bukhari-6172

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97 ஒருவர் மற்றொருவரிடம் ‘விலகிப்போ’ என்று கூறுவது.192

6172. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(தன்னை இறைத்தூதர் என வாதிட்டு வந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவன்) இடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உனக்காக ஒன்றை நான் (மனத்தில்) மறைத்து வைத்துள்ளேன். அது என்ன (சொல்)?’ என்றார்கள். அவன், ‘அத்துக்’ (‘அத்துகான்’ எனும் 44 வது ) என்றான். நபி(ஸல்) அவர்கள், ‘தூர விலகிப்போ’ என்றார்கள்.193

Book : 78


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِابْنِ صَائِدٍ: «قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا، فَمَا هُوَ؟» قَالَ: الدُّخُّ، قَالَ: «اخْسَأْ»


Bukhari-6171

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6171. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘மறுமை நாள் எப்போது வரும்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதற்காக என்ன முன்முயற்சி செய்துள்ளாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்’ என்று கூறினார்கள்.191

Book :78


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَتَى السَّاعَةُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَا أَعْدَدْتَ لَهَا» قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ وَلاَ صَوْمٍ وَلاَ صَدَقَةٍ، وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»


Bukhari-6170

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6170. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

‘(இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

Book :78


قِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرَّجُلُ يُحِبُّ القَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟ قَالَ: «المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ» تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ


Bukhari-6169

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6169. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Book :78


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَقُولُ فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ» تَابَعَهُ جَرِيرُ بْنُ حَازِمٍ، وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ، وَأَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-6168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96 வலிவும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம்.189 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்காக மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கருணை உடையவ னாகவும் இருக்கின்றான். (3:31)

6168. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்.190

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 78


«المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ»


Bukhari-6167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6167. அனஸ்(ரலி) அறிவித்தார்.

கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?’ என்று கேட்டார்கள். அவர் ‘நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!’ என்றார்கள். உடனே நாங்கள், ‘நாங்களும் அவ்வாறுதானா?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.

-அப்போது முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் அடிமை (எங்களைக்) கடந்து சென்றார்கள். அவர் என் வயதொத்த (சிறு)வராக இருந்தார்.

‘இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே மறுமை சம்பவிக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது அவ்வளவு நெருக்கத்தில் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்.)

أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ البَادِيَةِ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ قَائِمَةٌ؟ قَالَ: «وَيْلَكَ، وَمَا أَعْدَدْتَ لَهَا» قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ» فَقُلْنَا: وَنَحْنُ كَذَلِكَ؟ قَالَ: «نَعَمْ» فَفَرِحْنَا يَوْمَئِذٍ فَرَحًا شَدِيدًا، فَمَرَّ غُلاَمٌ لِلْمُغِيرَةِ وَكَانَ مِنْ أَقْرَانِي، فَقَالَ: «إِنْ أُخِّرَ هَذَا، فَلَنْ يُدْرِكَهُ الهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ» وَاخْتَصَرَهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-6166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6166. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) ‘உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)’ அல்லது ‘உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)’. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

தனது ஆசிரியரான வாகித் பின் முஹம்மத் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று சந்தேகமாக கூறியதாக ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார் என்று மேற்கண்ட காலித் பின் ஹாரிஸின் அறிவிப்பில்  இடம்பெற்றுள்ளது.

ஷுஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து நள்ரு பின் ஷுமைல் அறிவிக்கும் அறிவிப்பில் ‘வைஹக்கும்’ என்று இடம் பெற்றுள்ளது.

முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்களின் மகனான உமர் பின் முஹம்மத் அவர்களின் அறிவிப்பில் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று இடம்பெற்றுள்ளது.

(எனவே இந்த சந்தேகம் முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது)

وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ – قَالَ شُعْبَةُ: شَكَّ هُوَ – لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ” وَقَالَ النَّضْرُ، عَنْ شُعْبَةَ: «وَيْحَكُمْ» وَقَالَ عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ: «وَيْلَكُمْ، أَوْ وَيْحَكُمْ