Author: Farook

Bukhari-5120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5120. ஸாபித் அல் புனானி(ரஹ்) அறிவித்தார்

நான் அனஸ்(ரலி) அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களின் புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியடிப ஒரு பெண் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (மணந்துகொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?’ எனக் கேட்டார்” என்று கூறினார்கள்.

அப்போது அனஸ்(ரலி) அவர்களின் புதல்வி, ‘என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்!” என்று கூறினார். அனஸ்(ரலி), ‘அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்து கொள்ள) ஆசைப்பட்டார். எனவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்” என்று கூறினார்கள்.

Book :67


كُنْتُ عِنْدَ أَنَسٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ، قَالَ أَنَسٌ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَلَكَ بِي حَاجَةٌ؟ ” فَقَالَتْ بِنْتُ أَنَسٍ: مَا أَقَلَّ حَيَاءَهَا، وَا سَوْأَتَاهْ وَا سَوْأَتَاهْ، قَالَ: «هِيَ خَيْرٌ مِنْكِ، رَغِبَتْ فِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا»


Bukhari-5119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்:

இந்த(த் தவணை முறை)த் திருமணம் (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டும் (நெருக்கடி நிலையில்) அனுமதிக்கப்பட்டதா? அல்லது மக்கள் அனைவருக்கும் உள்ள பொது அனுமதியா என்று எனக்குத் தெரியவில்லை. 60

அபூ அப்தில்லாஹ் புகாரீ(யாகிய நான்) கூறுகிறேன்:

இத்திருமணத்திற்கான அனுமதி விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

Book :67


«أَيُّمَا رَجُلٍ وَامْرَأَةٍ تَوَافَقَا، فَعِشْرَةُ مَا بَيْنَهُمَا ثَلاَثُ لَيَالٍ، فَإِنْ أَحَبَّا أَنْ يَتَزَايَدَا، أَوْ يَتَتَارَكَا تَتَارَكَا» فَمَا أَدْرِي أَشَيْءٌ كَانَ لَنَا خَاصَّةً أَمْ لِلنَّاسِ عَامَّةً، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَبَيَّنَهُ عَلِيٌّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَنْسُوخٌ»


Bukhari-5117 & 5118

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5117 & 5118. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களும் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம். 59 அப்போது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தூதர் ஒருவர் வந்து, ‘அல்முத்ஆ’ (தவணைமுறை)த் திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ‘அல்முத்ஆ’ திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று அறிவித்தார்.

Book :67


كُنَّا فِي جَيْشٍ، فَأَتَانَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّهُ قَدْ أُذِنَ لَكُمْ أَنْ تَسْتَمْتِعُوا فَاسْتَمْتِعُوا»


Bukhari-5116

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5116. அபூ ஜம்ரா நஸ்ர் இப்னு இம்ரான்(ரஹ்) அறிவித்தார்

‘அல்முத்ஆ’ (தவணை முறைத்) திருமணம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள், ‘அதற்கு அனுமதி உண்டு’ என்றார்கள். அப்போது அவர்களின் முன்னாள் அடிமை ஒருவர் ‘(பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை, பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில் தான் இத்திருமணத்திற்க அனுமதியுண்டாமே!” என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘ஆம்!” என்று பதிலளித்தார்கள்.

Book :67


سُئِلَ عَنْ مُتْعَةِ النِّسَاءِ «فَرَخَّصَ»، فَقَالَ لَهُ مَوْلًى لَهُ: إِنَّمَا ذَلِكَ فِي الحَالِ الشَّدِيدِ، وَفِي النِّسَاءِ قِلَّةٌ؟ أَوْ نَحْوَهُ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «نَعَمْ»


Bukhari-5115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5115. முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு அலீ(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்

(எம் தந்தை) அலீ(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘அல்முத்ஆ’ (தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். 58

Book :67


«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ المُتْعَةِ، وَعَنْ لُحُومِ الحُمُرِ الأَهْلِيَّةِ، زَمَنَ خَيْبَرَ»


Bukhari-5114

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5114. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் (மைமூனா(ரலி) அவர்களை) மணந்தார்கள். 56

Book :67


«تَزَوَّجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»


Bukhari-5113

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5113. உர்வா வின் ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

ஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் ‘(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்” என்று (நபியவர்களிடம்) கூறினேன். 

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர்கள் வழியாகவும் சற்று கூடுதல் குறைவுடன் வந்துள்ளது.

Book :67


كَانَتْ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ مِنَ اللَّائِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ عَائِشَةُ: أَمَا تَسْتَحِي المَرْأَةُ أَنْ تَهَبَ نَفْسَهَا لِلرَّجُلِ ” فَلَمَّا نَزَلَتْ: (تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ) قُلْتُ: «يَا رَسُولَ اللَّهِ، مَا أَرَى رَبَّكَ إِلَّا يُسَارِعُ فِي هَوَاكَ»

رَوَاهُ أَبُو سَعِيدٍ المُؤَدِّبُ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَعَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ


Bukhari-5112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5112. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றெவாருவரிடம் ‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது.

Book :67


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الشِّغَارِ» وَالشِّغَارُ أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الآخَرُ ابْنَتَهُ، لَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ


Bukhari-5111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5111. ஏனெனில், ஆயிஷா (ரலி), ‘இரத்த பந்த உறவால் யாரை மணப்பது கூடாதோ அவர்களை மணப்பதைப் பால்குடி உறவாலும் தடைசெய்யுங்கள்” என்று கூறினார்கள். 

அத்தாயாயம்: 67


«حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ»


Bukhari-5110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5110. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணமுடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்கள்:) இதை வைத்து, ஒரு பெண்ணுடைய தாயின் சகோதரியைப் போன்றே, அவளுடைய தந்தையின் தாயுடைய சகோதரியையும் நாங்கள் கருதுகிறோம்.

அத்தியாயம்: 67


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُنْكَحَ المَرْأَةُ عَلَى عَمَّتِهَا، وَالمَرْأَةُ وَخَالَتُهَا»
فَنُرَى خَالَةَ أَبِيهَا بِتِلْكَ المَنْزِلَةِ،


Next Page » « Previous Page